kaathaadi

காத்தாடி!

புத்தகத்தைத் திறந்து பாருங்கள். காத்தாடியைக் கண்டுபிடியுங்கள். அப்புறம், அதற்கு என்ன ஆகிறது என்று பாருங்கள். கதையையும் வர்லி ஓவியங்களையும் அனுபவித்து மகிழுங்கள்.

- Anitha Ramkumar

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அதோ பார்! காத்தாடிச் சண்டை!

அடடா! ஊதா காத்தாடி கிழிந்தது. அச்சச்சோ! மஞ்சள் காத்தாடி காணாமல் போனது. ஆகா! சிவப்புக் காத்தாடி கீழே விழுகிறது.

மேலே ஏறு, கையை நீட்டு, காத்தாடியைப் பிடி!

சீக்கிரம்! ஓடு! ஓடு!

இதோ, இங்கே வந்து ஒளிந்துகொள்.

நிற்காதே! வேகமாக ஓடு!

சரிந்து போக்குக் காட்டு!

வைக்கோலை ஏற்ற விடாமல் வண்டியை ஓட்டிப் போ!

குதி! சந்தைக்கு நடுவே வளைந்து வளைந்து ஓடு!

யார் மேலும் மோதாமல் மின்னல் போல ஓடு!

கடை வீதியில் புகுந்து, வேகமாக ஓடு!

ஆகா! வெற்றி! வெற்றி! நான் வென்று விட்டேன்!

இந்தச் சிவப்புக் காத்தாடி இப்பொழுது எனக்குச் சொந்தம்!

அச்சச்சோ! மறுபடியும் முதலிலிருந்து ஓடவேண்டுமா?