அதோ பார்! காத்தாடிச் சண்டை!
அடடா! ஊதா காத்தாடி கிழிந்தது.
அச்சச்சோ! மஞ்சள் காத்தாடி
காணாமல் போனது.
ஆ! சிவப்புக் காத்தாடி
கீழே விழுகிறது.
மேலே ஏறு, கையை நீட்டு, காத்தாடியை எடு!
சீக்கிரம்! ஓடு! ஓடு!
இதோ, இங்கே வந்து
ஒளிந்துகொள்.
நிற்காதே! வேகமாக ஓடு.
சரிந்து, போக்குக் காட்டு.
வைக்கோலை ஏற்ற விடாமல் வண்டியை ஓட்டிப் போ.
குதி! சந்தைக்கு நடுவே வளைந்து வளைந்து ஓடு.
யார் மேலும் மோதாமல் மின்னல்போல் ஓடு.
கடை வீதியில் புகுந்து, வேகமாக ஓடு!
ஆஹா! வெற்றி! வெற்றி! நான் வென்றுவிட்டேன்!
இந்தச் சிவப்புக் காத்தாடி இப்பொழுது எனக்கு சொந்தம்!
அச்சச்சோ! மறுபடியும்
முதலிலிருந்து
ஓடவேண்டுமா?