kaattu poonai kaattu poonai

காட்டுப் பூனை! காட்டுப் பூனை!

இந்தியாவின் வனங்களிலிருக்கும் பலவகைப் பூனைகளை சந்திக்கலாம், வாருங்கள்!

- Bhuvana Shiv

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

சில காட்டுப் பூனைகளின் உடலில் வரிகள் இருக்கும்.

புலியைப் போல!

சில காட்டுப் பூனைகளுக்கு பிடரி மயிர் இருக்கும்.

சிங்கத்தைப் போல!

சில காட்டுப் பூனைகளின் உடலில் புள்ளிகள் இருக்கும்.

சிறுத்தை மற்றும் சிறுத்தைப்  பூனையைப் போல!

சில காட்டுப் பூனைகள் சிறந்த மரமேறிகள்.

மேகச் சிறுத்தை மற்றும் பளிங்குப் பூனையைப் போல!

சில காட்டுப் பூனைகள் மலைகளின் உச்சியில் வாழ்பவை.

பனிச்சிறுத்தை மற்றும் பல்லாஸ் பூனையைப் போல!

சில காட்டுப் பூனைகள் பாலைவனத்தில் வசிப்பவை.

பாலைவனப் பூனையைப் போல!

சில காட்டுப் பூனைகளுக்கு மயிர் படர்ந்த காதுகள் இருக்கும். நிகண்டுப் பூனை மற்றும் சிவிங்கிப் பூனையைப் போல!

சில காட்டுப்பூனைகள் மீன் பிடிப்பதை விரும்பும்.

மீன்பிடிப் பூனையைப் போல!

சில காட்டுப் பூனைகள் உலகிலேயே மிகச் சிறிய காட்டுப் பூனைகளாக இருக்கும்.

துறுப்பன் பூனையைப் போல!

சில காட்டுப் பூனைகள் வீட்டுப் பூனைகள் போலவே தோற்றம் கொண்டவை.

காட்டுப் பூனை மற்றும் தங்க நிறப் பூனையைப் போல!

ஆனால், இவை எல்லாமே காட்டுப் பூனை வகைகள்தான்!

இக்கதையில் வரும் விலங்குகளின் ஆங்கிலப் பெயர்கள்

சிறுத்தைப் பூனை - Leopard Cat

பளிங்குப் பூனை - Marbled Cat

மேகச் சிறுத்தை - Clouded Leopard

பனிச்சிறுத்தை - Snow Leopard

பல்லாஸ் பூனை - Pallas’ Cat

பாலைவனப் பூனை - Desert Cat

நிகண்டுப் பூனை - Caracal

சிவிங்கிப் பூனை - Lynx

மீன்பிடிப் பூனை - Fishing Cat

துறுப்பன் பூனை - Rusty Spotted Cat

தங்க நிறப் பூனை - Golden Cat

காட்டுப் பூனை - Jungle Cat