ஒரு அடர்ந்த காடு இருந்தது .
அது அடர்ந்தும் இருண்டும் இருந்தது.
எங்கும் பெரிய மரங்கள் நிறைந்திருந்தன .
அதற்குள் பாதைகளும் இருந்தன.
அந்த காட்டில் நிறைய மிருகங்களும் பறவைகளும் வசித்து வந்தன .
ஒருநாள் அனைத்து மிருகங்களும் ஒன்று கூடின .
"நீ அத கேள்வி பட்டியா ?" - கிளி கேட்டது .
"ஆமாம் " - மான் சொன்னது
"என்ன...என்ன...என்ன ? "- பயந்த முயல் கேட்டது .
"நமது காட்டில் ஒரு பள்ளிக்கூடம் உள்ளது "- மிங்கு குரங்கு சொல்லியது .
குண்டு யானை யோசித்தது "..ம்ம் ..?! "
நெடிய ஒட்டகச்சிவிங்கி குஷியானது .
நகரும் நத்தை சத்தமாக நவில்ந்தது " வாங்க சீக்கிரம் , எல்லாரும் அங்கு செல்வோம் "
கிளி முன்னே பறந்து சென்றது.
மிங்கு மரத்துக்கு மரம் தாவி சென்றது .
புரக்கா எனும் மலைப்பாம்பு வேகமாக ஊர்ந்து சென்றது .
"அங்கே பார் ...: - கத்தியது கிளி
.."உன்னால படிக்க முடியுமா ?" - என்றது கிளி .
தலைகீழாக தொங்கிய மிங்கு சொல்லியது ...
"எல்லாமே தலைகீழா எழுதி இருக்கே "
ஸ்ஸ் -னு பெருமூச்சு விட்ட மலைப்பாம்பு " இங்க ஒருத்தருக்கும் படிக்கச்
தெரியாதா ? " என்றது.
விரைவில் எல்லா நண்பர்களும் அங்கே கூடினர்
லம்பு மேல பாத்து சொல்லுச்சு "இங்க யாரும் இல்ல "
மிங்கு சொல்லுச்சு " இங்க யாரும் இல்ல "
கிளி "நல்லா பாருங்க ...ம்ம்..தேடுங்க ..தேடுங்க ..." என்றது .
குட்டி கரடி அறிவிச்சது
"இங்க ஒரு குட்டி ரூம் இருக்கு ..."
நத்தை சொல்லுச்சு " எனக்கு ஒரு ஊஞ்சல் கிடைச்சிருக்கு ..!"
முயல் சொல்லுச்சு - "இந்த பிளாக் எதுக்கு யூஸ் ஆவும் ?"
மிங்கு குரங்கு "அது என்னது ?"
மலைப்பாம்பு புரிய வச்சது " அநேகமா அது ஒரு பென்சிலா இருக்கலாம் "
யானையும் சிவிங்கியும் ஒரு ரூம பாத்துச்சு
அதுங்க எல்லாத்தையும் கூப்டு சொல்லுச்சு
"பாருங்க இங்க என்ன இருக்கு ன்னு ?"
எல்லாம் ஸ்கூல் பைய தூக்கிட்டு வந்துருச்சுங்க ...
"டீச்சர் ...டீச்சர் ...எங்க டீச்சர் எங்கன்னு கத்த ஆரம்பிச்சுதுங்க .
ஆனா யாருக்குமே தெரியல .
அப்போ அதுக்கு ஒரு உறுமல் சத்தம் கேட்டது .
அப்புறம் ஒரு பெரிய சத்தம்.
இன்னும் ஒரு பெரிய உறுமல்
புர்கா -வும் மிங்கு வும் பயந்துடிச்சி.
கிளி போர்டு பின்னாடி பம்மிருச்சி.
"யாரு அது ..?"
மிங்கு " ஹப் " ன்னுச்சு
எல்லாரும் அமைதி ஆயிட்டாங்க .
எல்லாம் டீச்சர் வந்த திசையை கவனமா பாத்துட்டு .. ..அப்புறம் தங்களுக்குள்ள மாறி மாறி பாத்துகிச்சுங்க .
டீச்சர் போர்டு பக்கம் திரும்புனாங்க .
அவ்ளோதான் ...
"தவ்வு .."ன்னு கத்துச்சு குரங்கு ...
"ஓடு .." ன்னு கத்துச்சு கிளி ...
தம் ..தம்...யானை ஓடுது ...
எல்லாம் கத்துது " ஓடுங்க ...ஓடுங்க "
டீச்சர் திரும்பி பாக்கும்போது அங்க ஒருத்தரும் இல்ல