நான் காலயில் கண்விழித்த பொழுது, மீண்டும் சூரியன் உதயமாகிப் பிரகாசித்துக்கொண்டிருந்தது. எங்கே இருக்கிறேன் என்ற கேள்வியுடன் என்னச் சுற்றிப் பார்த்தேன்.
அப்பொழுது எனக்கு ஞாபகம் வந்தது. நான் ஒரு கடல் ஆமைக் குஞ்சு, ஆலிவ் ரிட்லி ஆமை, மிகப்பரந்த நீலமான உலகத்தின் நடுவில். அதைக் கடல் என்று யாரோ சொன்னதையும் நான் கேட்டிருக்கிறேன்.
என்னச் சுற்றி எல்லாத் திசைகளிலும் நீலம் மற்றும் பச்சை நிறத்தில் தண்ணீர். சூரிய ஒளியோ மேகங்களோடு கண்ணாமூச்சி விளயாடிக்கொண்டிருந்தது.
நீந்துவதற்குச் சாதகமான என்னுடைய இரு துடுப்புகள் போன்ற உறுப்புகள (ஃப்ளிப்பர்) உடலுக்கடியில் நுழைத்துக்கொண்டு, நீரோட்டம் என்னக் கொண்டு செல்லும் வழியில் சிறிது நேரம் மிதந்தேன்.
நான் எங்கிருக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்ல. அதனாலென்ன? சூரியனின் வெளிச்சம் இருக்கிறது. வயிறும் நிரம்பி இருக்கிறதே! சூரியன் எனக்கு சூடு தந்தது.
எனக்குள் புது சக்தியை நிரப்பியது. இனிமேல் வாழ்க்கை முழுவதும் இங்கேயே இருந்துவிட்டால் எத்தன சுகம் என்ற எண்ணம் மனதில் தோன்றிய நேரம், மீன்கள் கூட்டம் ஒன்று என்னக் கடந்து சென்றது. அவற்றைத் துரத்திக்கொண்டு, உண்மையிலே பெரிய அளவு மீன் ஒன்று பின்னாலே சென்றது.
அந்தப் பெரிய மீன் மிகுந்த பசியுடன் இருப்பது எனக்குத் தெரிந்தது. என்னப் பார்த்ததும், அதன் கண்களில் தனியாக ஒரு ஒளி. "ம்ம்ம்ம்!!! கடல் ஆமைக் குஞ்சு சூப்!" என்று அவன் நினப்பது எனக்குத் தெரிந்தது.
சில கணங்களுக்குப் பின் நான் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு வேகமாக நீந்தத் தொடங்கினேன்.
அவனுடைய பெரிய பற்கள் என்னுடைய வால்புறத்தைக் கவ்வும் முயற்சியில் என் பின்னால்! நீந்தியதில் எனக்குக் களப்பு தோன்றத் தொடங்கும் நேரம், ஒரு கடல் பாசி மிதவையைப் பார்த்தேன். கடல் பாசி மிதவை என்பது மிதக்கும் கடல் பாசியும், மரத்துண்டுகளும் சேர்ந்த ஒரு தொகுப்பு.
நீரின் ஓட்டத்தோடு கடல் பரப்பு முழுவதும் மிதந்து செல்லும். அந்த மிதவையின் மீது, பயணிகளாக கடலின் சிறிய மற்றும் சற்று பெரிய உயிரினங்கள், மிதந்துகொண்டு கடலில் ஏதாவது நடப்பதற்காக காத்திருக்கும்.
நன்றியுணர்வோடு நானும் அந்த மிதவையில் ஏறிக்கொண்டேன். அதன்பின் பலப்பல வருடங்களுக்கு இந்தப் பாதுகாப்பான இடத்தை விட்டு நான் விலகவில்லை.
இந்த மிதவையைத் தாண்டி உள்ள, பெரிய பரந்த உலகத்தில்
நுழைந்து பார்க்கவேண்டிய தருணம் வந்துவிட்டது என்று நினத்தேன்.
நீரின் அடியில் உள்ள கடல் பாறைகளப் பற்றி நான் பல அற்புதமான விஷயங்களக் கேள்விப்பட்டிருந்தேன். அங்கு என்னப் போலப் பல கடல் ஆமைகளும் வாழ்கின்றன. எல்லோரும் இந்தப் பாறைகள,
கடலில் உள்ள தேவலோகம் என்று சொன்னார்கள்.
அதில் பல அழகான, பளிச்சென்ற வர்ணங்களுடன் பல
உயிரினங்கள் நிறைந்திருப்பதாகச் சொன்னார்கள்.
கோமாளி மீன் போன்ற தீங்கு விளவிக்காத
உயிரினங்களும், ஸ்கார்ப்பியன் மீன் போன்ற விஷ
ஜந்துக்களும் அங்கு உண்டு.
திடீரென்று எங்கும் இருள் சூழ்ந்தது. ஒரு மிகப்பெரிய நிழல் என் மீது படிந்தது. பயந்து போனேன்.
தலதூக்கிப் பார்த்தபோது இதுவரை பார்க்காத மிகப்பெரிய கடல் ஆமையைப் பார்த்தேன்.
அதன் முதுகுப் பகுதி மிருதுவாகவும், தோல் போன்றுமிருந்தது.
எனக்கு ஒரே ஆச்சரியம்! மிருதுவான முதுகுடன் ஒரு கடல் ஆமையா? எனக்குத் தெரிந்தவரை எல்லாக் கடல் ஆமைகளுக்கும் முதுகு கடினமான ஓடு.
அந்தப் பெரிய கடல் ஆமை நான் விழிப்பதைப் பார்த்துக் கேட்டது. "ஆச்சரியமாக உள்ளதா?" என்று மிக இனிமையாகப் பேசியது.
"நீங்கள் எங்கே போகிறீர்கள் சார்!" நான் கேட்டேன்.
"மற்ற கடல் ஆமைகளுடன் தங்க, பாறைக்குச் செல்கிறீர்களா?"
"ஆ!" தோல் முதுகு பெருமூச்சுவிட்டது. எனக்கு எங்கே அந்தப் பாக்கியம்? நான் ஜெல்லிமீனத் தேடிச் சென்றுகொண்டிருக்கிறேன். அதைத்தான்
நான் சாப்பிடுவேன்."
"அது எங்கே இருக்கும்?" கேட்டேன்.
"கடலின் மிகமிக ஆழத்தில்!" பதில் சொன்னது தோல் முதுகுக் கடல் ஆமை. "சில சமயம் அவைகளப் பிடிக்க நான் 1000 அடி வரை மூழ்க வேண்டியிருக்கும். சில சமயம் இதற்காக நான் கானடா வரை பயணம் செல்லவேண்டியிருக்கும்.
அங்கே கடல்நீர் மிகுந்த அளவு குளுமையுடன் இருக்கும். நம்மைவிட்டால் வேறு எந்த ஊர்வனவும் அந்தக் குளுமையை தாங்காது."
"நான் கேட்பது அதிகப்பிரசங்கித்தனம் இல்லயென்று நினத்தால் தயவு செய்து சொல்லுங்கள், உங்கள் எடை எவ்வளவு?" நான் நிதானமாகக் கேட்டேன்.
"சின்னக் கண்ணே! கிட்டத்தட்ட 600 கிலோ கிராம்!" பதில் சொன்னது தோல் முதுகுக் கடல் ஆமை. எனக்கு என்னுடைய எடை, அதற்குக் காரணமான உடல் கொழுப்பு பற்றிப் பெருமைதான்.
ஏனென்றால் மிகுந்த தூரம் நான் இடமாற்றம் செய்யும்பொழுது சக்தியாக உதவுவது இந்த கொழுப்புதான்! சரி! நான் கிளம்பவேண்டும்..."
"நிச்சயமாக சார்!" நான் சொன்னேன், "ஆனால் நீங்கள் செல்லும்முன் எனக்குக் கடலடிப் பாறைக்குச் செல்ல வழி சொல்வீர்களா?" என்று கேட்டேன்.
"அதுதான் வழி"! என்று தன்னுடைய நீந்தும் துடுப்புக் கை ஒன்றால் சுட்டிக் காட்டிவிட்டு நீந்திச் சென்றது தோல் முதுகுக் கடல் ஆமை.
"நன்றி சார்! வேட்டை அமோகமாகயிருக்கட்டும்!" என்று கூறிவிட்டு நான் பாறை நோக்கிப் பயணமானேன்.
பச்சைக் கடல் ஆமையை நான் பார்த்தது கடல் பாறையின் மீதுதான். என்னுடைய தோழி பருந்து மூக்கு,-அவளுடைய வாயும் பருந்தின் அலகைப் போல் வளந்தது - பச்சைக் கடல் ஆமைக்கு 50 வயதாகிறது!" என்று சொன்னாள். "யம்மாடி? அத்தன வயதா?" நான் கேட்டேன், "ஆனாலும் எப்படி இளமையாக தெரிகிறாள்?"
"சொல்கிறேன்!" பருந்து மூக்கு ஆரம்பித்தாள், பச்சைக் கடல் ஆமை கடல்புல், "பாசிமட்டுமே சாப்பிடும். அதனால் வாலிபப் பருவத்தை அடைவதற்கே 30 வருடம் பிடிக்கிறது. நானும், நீயும், பத்து வயதுக்குள் இந்தப் பருவத்தைத் தொட்டுவிடுகிறோம்."
"உனக்குத் தெரியுமா?" என் தோழி தொடர்ந்தாள், "அவளுக்குக் கூடுகட்டி முட்டையிடவேண்டுமானால், அவள் கடல் நடுவே உள்ள தீவுகளுக்குச் சென்றுவிடுவாள். தெளிவான நீலக் கடல், வெள்ள மணல், அற்புதமான அழகு!"
"நீ அங்கே போயிருக்கிறாயா?" நான் கேட்டேன்!
"ஓ! ஆமாம்! ஆனால் அங்கே செல்லச் சிலசமயம் பவழப் பாறைகள் மீதும் தவழ்ந்து செல்லவேண்டியிருக்கும்" சொன்னாள் பருந்து மூக்கு.
எனக்கு உடம்பு ஆடியது. கூரான பவழப் பாறைகளின் மீது தவழ்ந்து செல்வது எனக்குப் பிடிக்காது. எனக்குப் பிடித்தது என் மிருதுவான வயிற்றின் அடியில் மெத்தென்ற மணல் பரப்பு.
"நீ அங்கே செல்லத் தேவையில்ல. கவலயை விடு!" இன்னொரு ரிட்லி கடல் ஆமை என்னத் தேற்றியது. நாம் கூடுகட்டி முட்டையிட மெக்ஸிகோ,
கோஸ்டாரிக்கா, இந்தியா, இதுபோல மிருதுவான கடற்கரை போதும். இதெல்லாம் நேரம் வரும்போது நீயே பார்க்கலாம்."
"சரியான நேரம் எது என்று எப்படி தெரியும்?"
நான் மிகுந்த ஆர்வமாகக் கேட்டேன்.
"உனக்குத் தானே தெரியும்! என்ன நம்பு" என்றுமட்டும்
சொல்லிவிட்டு, அவள் நீந்திச் சென்றாள்.
நான் சில மகிழ்ச்சியான வருடங்களப் பாறைகள் மீது கழித்தேன். என்னுடைய பல கடல் ஆமை உறவினர்களச் சந்தித்தேன். பச்சைக் கடல் ஆமை மற்றும் பருந்துமூக்கைத் தவிர, நான் லாகர்ஹெட் கடல் ஆமைகளயும் சந்தித்தேன். அவைகளுக்கு மிகப் பெரிய தல. இதைத்தவிர என்னப் போல் ரிட்லி கடல் ஆமைகள் ஏராளமாகப் பார்த்தேன்.
இப்படியே இருக்கும்பொழுது, ஒரு நாள், நான் முழுவதும் வளர்ந்து இருந்தேன். செல்வ தற்கு வேள வந்துவிட்டது. இதுதான் நேரம் என்று எப்படி எனக்குத் தெரிந்தது? என்னக் கேட்டால் எனக்குத் தெரியாது. எனக்குள்ளே, ஆழத்திலிருந்து ஏதோ ஒன்று எனக்குச் சொன்னது.
எல்லா ரிட்லி கடல் ஆமைகளப் போலவே, நானும், வடக்கு திசையில், இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோரமாகப் பயணம் செய்து, ஒரிஸ்ஸாவை அடைந்து அங்கே உள்ள மிருதுவான பரப்புடைய கடற்கரையில் என்னுடைய முட்டைகள இடவேண்டும் என்பது எனக்குள் தெரிந்தது. என் தலக்குள்ளிருக்கும் சிறுதிசைகாட்டி காம்பஸ் எப்படிச் செல்வது என்று எனக்கு வழிகாட்டும்.
"இது என்ன பெரிய தூரம்? வெறும் 2000 கிலோமீட்டர்!" ஏளனம் செய்தது ஒரு லாகர்ஹெட். என்ன ஜம்பம்! அது வேறு திசையில் பயணம் சென்றது. லாகர்ஹெட்டுகள் சுமார் 15000 கிலோமீட்டர்கள் பயணம் செய்து, கலிபோர்னியாவிலிருந்து பஸிபிக் பெருங்கடலத் தாண்டி ஜப்பானுக்குச் சென்று தங்கள் முட்டைகள இடும். அதன் பேச்சைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் நான் என் வழியில், எனக்குப் பிடித்த உணவான பறக்கும் மீன்களச் சுவைத்தவாறே பயணம் தொடர்ந்தேன்.
பெரிய பயணம் தொடங்கியது. என்னச் சுற்றிலும் நீரில் என்னப் போலவே ரிட்லி ஆமைகள், வேகமாக நீந்திக் கொண்டிருந்தன.
பயணம் அத்தன சுலபமானதல்ல! வழியிலே பலவிதமான அபாயங்கள்.
நான் இப்பொழுது சாதாரண மீன்கள விடப் பெரிய அளவில் இருந்தால் கூட, சுறாமீன் எங்களப் பிடித்துவிடும் அபாயம் இருந்தது.
இதைவிட அபாயமானது, மீன்களப் பிடிக்க வழியெல்லாம் விரித்திருந்த மீன்வலகள். அவற்றைக் கடக்கவேண்டிய கட்டாயம்.
நான் மிகுந்த கவனத்துடன் பயணம் செய்தேன். வலயில் விழாமல் நீந்தினேன். குறிப்பாக மீன் பிடிப் படகுகளின் பெரிய வலகளில்! எல்லா வலகளிலிருந்தும் நான் தப்பிவிட்டேன்! எங்களில் சில நண்பர்களுக்கு இந்த அதிர்ஷடமில்ல.
இறுதியில், நான் கஹிர்மாதா கடற்கரையை அடைந்தேன். இந்தியக் கடல் பகுதியில் என்னப் போன்ற ரிட்லிக்கள் மிகப் பெரும்பான்மையாக முட்டையிடுவது இங்குதான்.
என்னுடைய முதல் முட்டையிடும் தருணம் வந்துவிட்டது.
இரவுதான் முட்டையிடுவோம். கடல் அல சற்று எழும்பும்வரை நான் காத்திருந்தேன். இதனால் நான் கடற்கரையில் அதிகம் ஊர்ந்து செல்ல வேண்டியதில்ல.
எழும்பிய கடல் அலயுடன் பயணம் செய்து நான் கடற்கரைக்கு வந்தேன். பிறந்த நாளிலிருந்து முதல்முறையாக நிலப்பரப்பை எனக்குக் கீழ் உணர்ந்தேன்.
முதலில் விநோதமாக உணர்ந்தேன். பிறகு மெதுவாக நகர்ந்து சென்று கரையில் உலர்ந்த ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்தேன்.
அலகள் தொடும் பகுதிக்கு அப்பால் மணல் உலர்ந்து இருந்தது.
நான் முன்புறமுள்ள இரு சிறு துடுப்பு போன்ற கைகளயும்
வீசி நகர்ந்த பொழுது மணல் சுற்றிலும் பறந்தது.
நிலப்பரப்பில் செல்வது எங்களுக்கு மிகவும் கடினமானது.
நடுவே மூச்சு விட்டுக்கொள்ள நின்றபோது,
தல தூக்கிப் பார்த்தேன். கடற்கரை நீண்டு,
இருண்டு இருந்தது.
கடற்கரைக்குப் பின்னால் பெரிய மணல்மேடும், சில புதர்களும் இருந்தது. இந்த கடற்கரைக்குப் பின்னால் ஒரு பெரிய காடு இருப்பதாகக் கேள்விப்பட்டுள்ளேன். பித்தர்கனிகா என்ற பெயருடைய இந்தக் காட்டில், உவர்ப்பு நீரில் வாழும் முதலகளும், ராஜ நாகங்கள் மற்றும் பலவகை மிருகங்களும் இருப்பதாகச் சொன்னார்கள்.
திடீரென்று கடற்கரையில் இன்னொரு மிருகத்தைப் பார்த்தேன். நான்கு கால்களுடைய அந்த மிருகம் கடல் ஆமை முட்டைக்கூடு ஒன்றைத் தோண்டியது. நான் எவ்வளவு வேகமாக முடியுமோ, அத்தன விரைவாக நீருக்குள் சென்றேன். பிறகு இரவு நேரத்தில், மீண்டும் ஊர்ந்து வந்தேன். கடற்கரையில் உள்ள ஐபோமியா கொடிகளுக்குள் சென்றேன்.
நான் கடற்கரையில் தேர்ந்தெடுத்த இடத்தில், உலர்ந்த மணல அப்புறப்படுத்தி, என்னுடைய பின்னங்கைகளால் ஒரு குழியைத் தோண்டினேன். இதைச் செய்வதற்கு எனக்கென்று ஒரு தனி வழி உண்டு. ஒரு கைக்குப் பின்னால் அடுத்த கை என்று உள்ளே நுழைத்து, கொஞ்சம் கொஞ்சம் மணலத் தோண்டி, அதன வெளியே எறிவேன்.
இதேபோலத் தொடர்ந்து பல கைப்பிடி மணல வெளியே எடுத்தபிறகு என்னுடைய கூடு தயாரானது. இரண்டு அடி ஆழம்,
ஒரு குடுவையைப் போல அமைப்பு, குறுகலான கழுத்து, கீழே அகலமான குழிப் பகுதி. பார்க்கப் பிரமாதமாக இருந்தது. பிறகு நான் முட்டையிடத் தொடங்கினேன்.
1,2,3,...,44,45,...,99,100, என் வேல முடிந்தது.
என்னுடைய விலமதிப்பில்லாத முட்டைகள நான் கவனமாக மணலால் மூடினேன். பிறகு என் உடலால் அதை அழுத்திச் சமப்படுத்தினேன் பிறகு கொஞ்சம் மணல அதன் மீது தூவி, என் கூட்டை யாரும் கண்டுபிடிக்கமுடியாதபடி செய்தேன்.
பிறகு மிக விரைவாக நான் கடலுக்குள் சென்றேன். இங்கு நான் பத்திரமாக உணர்ந்தேன்.
சிலநாள் கழித்து மீண்டும் நான் முட்டையிடத் தயாரானேன். சாதாரணமாக இந்தப் பருவத்தில் இரண்டு அல்லது மூன்று முறை முட்டையிடும் அளவுக்குத் தயாராக இருப்போம். புதிய முட்டைகள் எங்களுக்குள் தயாராக இரண்டு வாரங்கள் தேவைப்படும். முன்பு கூடுகட்டி முட்டையிட்ட இடத்திலேயே இந்த தடவையும் முட்டையிட என்னுடைய பொது அறிவு சொன்னது. அது ஒரு நல்ல, பாதுகாப்பான இடமாகத் தோன்றியது.
அந்த இரவு, நான் தாழ்வான நீர்ப் பரப்பில் உயர்ந்த அல வரக் காத்திருந்தேன். காற்றில் சிறு மாற்றம் ஒன்றைக் கவனித்தேன். அது வலுவாக இருந்ததோடு, வேறு திசையிலிருந்து வீசியது. திடீரென என்னச் சுற்றி, கூடுகட்டி முட்டையிடத் தயாராக உள்ள நூற்றுக்கணக்கான இல்ல, ஆயிரக்கணக்கான ஆமைகள்! கடல் நீரில் ஆமைகள் காத்திருக்கும் என்பது எனக்குத் தெரிந்ததுதான். ஆனால் இத்தன எண்ணிக்கையில் எதிர்பார்க்கவில்ல.
பிறகு, நாங்கள் எல்லோரும் கடற்கரை நோக்கிச் சென்றோம். அங்கே எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கடற்கரை முழுவதும் கடல் ஆமைகள்! மணல் சுற்றிலும் காற்றில் பறக்கிறது.
ஒரு வழியாக நான் ஒரு காலியான இடத்தைக் கண்டுபிடித்தேன். என் கூட்டைத் தயார் செய்யத் தொடங்கினேன்.
எனக்குப் பக்கத்திலிருந்த கடல் ஆமைக்கும் எனக்கும் பழைய நட்பு. அவள் கூட்டைத் தோண்டாமலேயே முட்டையிடத் தொடங்கிவிட்டாள்.
நான் அதிர்ந்துபோனேன்.
கடல் ஆமைகள் அப்படிச் செய்யாது. இதுதான் அர்ரிபடா, "இந்த நேரத்தில், சில சமயம், நாம் இப்படிச் செய்வதுண்டு" என்றாள் அவள்.
நாங்கள் ஏன் இப்படிச் செய்கிறோம் என்று தெரியவில்ல. பல மில்லியன் வருடங்களுக்கு முன் எங்கள் மூதாதையரான பாட்டிமார்கள் இதைச் செய்திருக்க வேண்டும். இதனால் பல கோடி கடல் ஆமைக் குஞ்சுகள் ஒரே சமயத்தில் வெளியே வந்து,
அதனால் பறவைகள், நண்டுகள், நரிகள் தாக்கினாலும், மிகப்பெருமளவு குஞ்சுகள் தப்பிப் பிழைக்க முடியும் என்று நினத்திருப்பார்கள் போலும்! இந்த யோசன இப்பொழுதும் பலனளிக்கிறது.
இப்பொழுது கூடுதலாக மனிதர்களிடமிருந்து எங்களக் காத்துக் கொள்ளும் அவசியம் வேறு!
இறுதியாக நான் உண்டு, உயிர்வாழும் இடத்திற்குத் திரும்பவேண்டிய நேரம் வந்தது. நான் அங்கு ஒரு வருடமோ, இரண்டு வருடமோ இருப்பேன். சாப்பிட்டு சக்தியைப் பெருக்கிக்கொண்டு மீண்டும் கஹிர்மாதாவுக்குப் பயணம் செய்து கூடுகட்டி முட்டையிடுவேன். ஆனால் பச்சைக் கடல் ஆமைக்கோ, சக்தியைப் பெருக்கிக்கொண்டு, முட்டையிடுவதற்கான பயணத்தை மேற்கொள்ளச் சுமார் ஐந்து அல்லது ஆறு வருடங்கள் தேவைப்படும்.
நான் கிளம்பும்பொழுது, நான் விட்டுச் செல்லும் முட்டைகள் நினப்பு வருகிறது. சுமார் 50 முதல் 60 நாட்கள், முட்டைகள் சூரியனால் சூடுபடுத்தப்பட்டு, மணலுக்குள் புதைந்திருக்கும். பிறகு ஒரு நாள், அவை குஞ்சாகப் பொரித்து, குஞ்சுகள் பிஞ்சு மூக்கால், முட்டைகள உடைத்து வெளியே வரும். சூரியன் மறைந்து மணல் வெப்பம் குறைய, நூறு குஞ்சுகளுக்கு மேல்,
ஒன்றாக மணலுக்கடியில் காத்திருக்கும். பிறகு இருளில், பாதுகாப்பான நேரத்தில், எல்லாம் ஒன்றாக ஒரே சமயம் வெளியே வரும். அவைகள் கடலில் பிரதிபலிக்கும் சந்திரனயும், நட்சத்திரங்களயும் பார்க்கும். செல்லவேண்டிய பாதை தெரியும். சாலவிளக்குகள் எதுவும் அவைகளத் தவறான திசையில் செலுத்தும்வண்ணம் கவர்வதற்கு, அங்கு இருக்காது என நம்புகிறேன்!
அவை எதிர்வரும் அலகளுக்கு எதிராக நீந்தும். எழும்பும் அலகளுக்குக் கீழே நழுவும்.
வழியில் பெரிய மீன்களும், சின்ன மீன்களும், கடற் பறவைகளும் கழுகுகளும் அவற்றை இரையாக உண்ணக் காத்திருக்கும். இதற்கிடையிலும் சில தப்பித்து வந்து விடும்.
பரந்த கடலில் மிதந்து செல்லும் சின்னக் கடல்பாசி மிதவைகளக் கண்டு பிடிக்கும். அவற்றைத் தங்கள் மிதக்கும் வீடுகளாக பல வருடங்கள் உபயோகிக்கும். காலப்போக்கில் வளரும். வளர்ந்து பின் உண்டு உறைவதற்கு இந்தப் பாறைகளத் தேடிவந்து சேரும்.
அப்பொழுது நாங்கள் சந்திக்கக் கூடும். ஆனாலும் அவற்றில் என் குஞ்சுகள் எவை என்று அடையாளம் காண முடியாது. இருந்தாலும் அவர்கள் எங்கோ இருக்கிறார்கள் என்ற நினப்பில் நான் சந்தோஷமாக இருப்பேன்.
என்னப் போலவே அவர்களும் கடற்கரைக்கு வந்து கூடுகட்டி, முட்டையிட்டு அவை மீண்டும் குஞ்சுகளாகி, அவைகளின் வளர்ச்சி என்று வாழ்க்கை மீண்டும் தொடங்கும்! மீண்டும் மீண்டும் தொடங்கும்!
கடல் ஆமைகளிடமிருந்து உங்களுக்கு ஒரு செய்தி!
உலகம் முழுவதும் கடல் ஆமைகளின் எண்ணிக்கை, பலவிதக் காரணங்களால் குறைந்துகொண்டே வருகிறது. சிலவகைக் கடல் ஆமைகளை அதன் மாமிசத்திற்காகக் கொல்கிறார்கள்.
இதிலிருந்து கடல் ஆமை சூப் தயாரித்துச் சுவைப்பதற்காக! பருந்து அலகு (ஏச்தீடுண்ஞடிடூடூ) கடல் ஆமைகளை அதன் முதுகு ஓட்டுக்காகக் கொல்கிறார்கள். இந்த ஓடுகளிலிருந்து மூக்குக் கண்ணாடிச் சட்டங்கள் மற்றும் தலையலங்காரத்திற்கான தயாரிப்புகளை உருவாக்குகிறார்கள்.
பல கடல் ஆமைகளின் முட்டைகளும், பொரித்த குஞ்சுகளும், நாய்கள் மற்றும் காக்கைகள் போன்றவற்றால் உண்ணப்படுகின்றன. ஆனால் இவைகளை விட மிகப்பெரிய அபாயம், மீன்பிடிக்கும் செயலால்தான் ஏற்படுகிறது.
கடல் ஆமைகள் மீன்களைப் பிடிக்க மீன்பிடிப் படகுகள் விரிக்கும் பெரிய வலைகளிலிருந்தும், மீனவர் விரிக்கும் பின்னல் வலைகள் என்றும் பலவிதமான வலைகளில் சிக்கி, நகர முடியாமல் மூழ்கி, இறக்கின்றன.
இந்தியாவில் கடல் ஆமைகளைப் பாதுகாக்கப் பல பாதுகாப்பு இயக்கங்கள் பெரும் முயற்சி செய்து வருகிறார்கள். ஒவ்வொரு கடலோர மானிலத்திலும் இது போன்ற இயக்கங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டு உள்ளன.
கடல் ஆமைகளைப் பாதுகாக்க நீங்கள் செய்யக்கூடியது என்ன?
நீங்கள் கடல் ஆமைகள் நாடி வந்து முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் கடற்கரை அருகில் வசிப்பவராக இருந்தால்:
• கடற்கரையைச் சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுங்கள். இதன் மூலம் கடல் ஆமைகளுக்கும், பொரித்த குஞ்சுகளுக்கும் மணல் பரப்பின் மேல் செல்லும்போது காயம் ஏற்படாமல் தடுக்க உதவலாம்.
• உங்கள் பகுதியில் உள்ள, உங்களை விட வயதில் மூத்தவர்களுக்குக் கடற்கரைக்கு அருகே உள்ள சாலை விளக்குகளாலும் , மற்ற ஒளிமிகுந்த விளக்குகளாலும், கடல் ஆமைகளின் முட்டைகள் பொரிக்கும் குஞ்சுகளுக்கு ஏற்படும் தொல்லையை விளக்குங்கள். முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள், இருளின் போர்வையில், கடல் நீரில் பிரதிபலிக்கும் நிலவின் ஒளியை அடையாளமாகக் கொண்டு, கடல் நோக்கிச் செல்லும். மிகப் பிரகாசமான மற்ற விளக்குகள் இருந்தால், குஞ்சுகள் குழப்பமடைந்து, தவறான திசையில் சென்று, ஆபத்தைச் சந்திக்கக்கூடும்.
• உங்கள் மானிலத்திலேயே கடல் ஆமைப் பாதுகாப்புக் குழுக்கள் இருந்தால், அதில் சேர்ந்து உதவ முயற்சி செய்யுங்கள்.
நீங்கள் கடற்கரை அருகில் வசிப்பவராக இல்லாமல் இருந்தால்:
• கடல் ஆமைகளைப் பற்றி மேலும் மேலும் படியுங்கள். அவைகளுக்கு ஏற்படும் அபாயத்தைப்பற்றி உங்களுக்குத் தெரிந்ததை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள். விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் கடல் ஆமைப் பாதுகாப்பின் ஒரு பெரிய அங்கமாகும்.