கொரில்லாக்கள் கடற்கரைக்குச் சென்றுள்ளன.
கொரில்லாக்கள் மணலைத் தோண்டுகின்றன.
கொரில்லா தண்ணீரில் குதிக்கிறது.
பச்சாக்!
கொரில்லா ஒரு கடையில் ருசியான சோளம் வாங்கி சாப்பிடுகிறது.
கொரில்லாக்கள் கடற்கரையில் ஃப்ரிஸ்பீ எறிந்து விளையாடுகின்றன.
கொரில்லா ஒரு நட்பான நாயுடன் விளையாடுகிறது.
கொரில்லா தன்னுடைய நண்பர்களிடம் காண்பிக்க கிளிஞ்சல்களை சேகரிக்கிறது.
கொரில்லாக்கள் சோர்வடைந்துவிட்டன. இப்போது, நிலாவைப் பார்த்து ரசிக்க வேண்டிய நேரமும் வந்துவிட்டது.