ஒவ்வொரு டிசம்பர் விடுமுறையின் போதும் ஏபல் அவனுடைய அம்மாச்சிக்கு வாழ்த்து அட்டை அனுப்புவான். வழக்கமாக, அது புத்தாண்டு அன்றைக்கு அவரைச் சென்றடையும்.
அன்று கிறுஸ்துமஸுக்கு முந்தைய நாள் மாலை. அம்மா ஏபலுக்குப் பிடித்த இனிப்பான பாயசம் செய்துகொண்டிருந்தார்.
ஆனால் ஏபல் கோபமாக தொம் தொம்மென தரையை உதைத்தான். “என்னாச்சு ஏபல்?” என்று கேட்டார் அம்மா. “போஸ்ட் மாஸ்டருக்கு என் கையெழுத்து புரிந்திருக்காது. அம்மாச்சிக்கு என் வாழ்த்து அட்டை கிடைக்காமல் போய்விடும்” என்று புலம்பினான் ஏபல்.
அதனால் அம்மா அவனை போஸ்ட் மாஸ்டர் வில்சனைச் சந்திக்க அழைத்துச் சென்றார்.
“வில்சன் மாமா!” ஏபல் கத்தினான், “என் கையெழுத்தால், அம்மாச்சிக்கு வாழ்த்து அட்டை கிடைக்காமல் போய்விடுமா?”
அதனால் அம்மா அவனை போஸ்ட் மாஸ்டர் வில்சனைச் சந்திக்க அழைத்துச் சென்றார்.
“வில்சன் மாமா!” ஏபல் கத்தினான், “என் கையெழுத்தால், அம்மாச்சிக்கு வாழ்த்து அட்டை கிடைக்காமல் போய்விடுமா?”
“கவலைப்படாதே” என்றார் போஸ்ட் மாஸ்டர் வில்சன். “எல்லாக் கடிதங்களையும் நமது ரோபாட் ரியாதான் வகைப்படுத்துகிறது.”
ரியா முகவரியை வாசித்து, அஞ்சல் குறியீட்டு எண்ணை அடையாளம் கண்டுகொள்ளும். பின், ஒவ்வொரு கடிதத்தையும் அஞ்சல் குறியீட்டு எண்ணைக் கொண்டு வகைப்படுத்தி அதை அதற்குரிய குவியலில் வைக்கும்.
ஆனால் ஏபலுக்கு இன்னும் கவலை தீரவில்லை. “என் வாழ்த்து அட்டையை ரியா சரியாக வகைப்படுத்தியிருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள் மாமா!”
போஸ்ட் மாஸ்டர் வில்சன் ஏபலின் வாழ்த்து அட்டையைத் தேடினார். அது சரியான பெட்டியில்தான் இருந்தது.
அம்மா வாழ்த்து அட்டையை சரிபார்த்தார். ஏபலின் 7 பார்க்க 1 போல இருந்தது.
“பின்னர் எப்படி அது சரியான பெட்டியில் இருக்கிறது?” என்று வியந்தான் ஏபல்.
“ரியா பல லட்சம் மக்களின் கையெழுத்தைப் பார்த்துக் கற்றுக்கொண்டிருப்பதால், உன்னுடைய அட்டையைச் சரியாக வகைப்படுத்திவிட்டது. அதனால்தான் பார்க்க 1 மாதிரி இருந்தாலும் உன் 7ஐ புரிந்துகொண்டிருக்கிறது” என்றார் போஸ்ட்மாஸ்டர் வில்சன்.
“ரியா மிகவும் புத்திசாலி!” என்றான் ஏபல்.
“ரியா எண்ணற்ற எடுத்துக்காட்டுகளிலிருந்து தினமும் கற்றுக்கொள்வதுதான் இதற்குக் காரணம். இதனை இயந்திரக் கற்றல் என்பார்கள்” என்றார் போஸ்ட் மாஸ்டர்.
“அப்போ அம்மாச்சிக்கு வாழ்த்து அட்டை கிடைத்துவிடுமா?”
“கவலைப்படாதே ஏபல்! உன்னுடைய அம்மாச்சிக்கு புத்தாண்டுக்குள் வாழ்த்து அட்டை கிடைத்துவிடும்.”
போஸ்ட் மாஸ்டர் வில்சன் சொன்னது சரிதான்! அம்மாச்சிக்கு புத்தாண்டன்று வாழ்த்து அட்டை கிடைத்துவிட்டது. ஏபல் அவருடன் தொலைபேசியில் பேசியபோது, தபால் நிலையத்தில் இருந்த அற்புதமான ரோபோவுடன் நடந்த கதையை சொல்லி மகிழ்ந்தான்.
இயந்திரக் கற்றல் என்றால் என்ன?
பிறக்கும்போது நமக்கு விவரம் தெரியாது. ஆனால் வளர வளர, புதியவற்றைக் கற்றுக்கொள்கிறோம். நம்மைப் போலவே கணினிகளாலும் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளமுடியும். மேலும் எப்படி என்று சொல்லிக் கொடுக்காமலேயே சில செயல்களைச் செய்யக் கற்றுக்கொள்ளும். எடுத்துக்காட்டாக உங்கள் கணிணி ஒருபசுமாட்டுக்கும் ஒரு பூனைக்குமான வேறுபாடுகளைச் சொல்ல வேண்டும் என்றால், நீங்கள் ஆயிரக்கணக்கான பூனைகள் மற்றும் பசுமாடுகளின் படங்களை அதனிடம் காண்பிக்க வேண்டும். அது அந்தப் புகைப்படங்களை ஆய்வுசெய்து, பூனைகள் சிறியவை மற்றும் பசுமாடுகள் பெரியவை என்றோ அல்லது பூனைகளின் மூக்கு பசுமாட்டின் மூக்கை விடச் சிறியதாக இருக்கும் என்றோ முடிவுக்கு வரும். மேலும் மேலும் அதிகமாக பசுமாடுகள், பூனைகளின் படங்களை அது ஆராயும் போது, அவற்றுக்கிடையிலான வேறுபாடுகளைச் சொல்வதில் அதன் தவறுகள் குறைந்து கொண்டே போகும்.
இது ஒரு புனைவுக் கதை. இந்தக் கதையில் குறிப்பிடப்பட்டுள்ள தொழில்நுட்பம் இருக்கிறது என்றாலும், இதில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க ஆசிரியரின் கற்பனையே.