ஒரு தோப்பில் ஒரு மயில் வாழ்ந்து வந்தது.
அது தோகை விரித்து ஆடும் அழகை நினைத்து கர்வம் கொண்டு இருந்தது.
அப்போது ஒரு நாள் அந்த தோப்பிற்கு ஒரு குரங்கு வந்தது.
அது மயிலை பார்த்து,"நீ தோகை விரித்து ஆடும் அழகை காண மக்கள் உன்னை தேடி வருகின்றனர்".
"ஆனால் குயிலை பாரு அது எவ்வளவு அழகாக பாடுகிறது."
குயில் காலையிலேயே மக்கள் இருக்கும் இடத்திற்கு சென்று தன்னுடைய இனிமையான குரலால் பாடி மகிழ்விக்கிறது.
"மாலையில் தன் கூட்டிற்கு சென்று விடுகிறது" என்று கூறியது.
இவ்வாறாக குரங்கு கூறி சிரித்தது.
அதை கேட்டதும் மயில், மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று கர்னக்கொடுரமாக கத்தியது.
அந்த குரலை கேட்ட மக்கள் மயிலை அடித்து தோப்பிற்கே துரத்தி விட்டார்கள்.