kathaigalin kathai

கதைகளின் கதை

கதைச் சுருக்கம்: மிகவும் மகிழ்ச்சி நிரம்பிய காட்டில் பத்திரிகையாளர் கரடியார் வாழ்ந்து வந்தார். அவருக்கு `ப்ரேக்கிங் நியூஸ்’ செய்தி கிடைக்காததால் மிகவும் சோகமாக இருந்தார். `ப்ரேக்கிங் நியூஸ்’ இல்லாமால் `பத்திரிகையாளர் கரடியாரை’ கற்பனை செய்து உங்களால் முடியுமா? அப்போது பாடிக்கொண்டே சர்தார்ஜி வர அவர் உண்மையிலேயே கரடியார் யார் என்பதைப் புரிய வைத்தார். கதைகளின் சக்தியையும், மாயவித்தையையும் அதை உருவாக்கியவர்களையும் கொண்டாடும் இந்தக் கதையைப் படியுங்கள்.

- Siddharthan Sundaram

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

கடல் அருகில் காடுகளைக் கொண்ட சம்வேரிஸ்தான் என்கிற புகழ்பெற்ற நாட்டில் ஓர் அழகான கோடை நாள். அலைகளில் திமிங்கிலங்கள் ஒன்றுக் கொன்று நடனமாடிக் கொண்டும் பாடிக் கொண்டும் இருந்தன.   ப்ரெளன் நிறத்தில் மென்மையான உடம்பைக் கொண்ட கடல் சிங்கங்கள் சூரிய ஒளியில் பிரகாசித்துக் கொண்டிருந்தன. அவை சத்தம் போட்டுக்கொண்டிருந்த கடற்பறவைகளுடன் கர்ஜித்துக் கொண்டும், திட்டிக் கொண்டும் பீக்-அ-பூ விளையாடின.

காட்டில் இருந்த உயிரினம் ஒவ்வொன்றும் மிகவும் சந்தோஷத்துடன் இருந்தன.

என்னை மன்னிக்கவும்! அது உண்மையாக இருக்க முடியாது. எந்தவொரு இடத்திலும் ஒருபோதும் ஒவ்வொரு உயிரினமும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.

ஹ்ம்ம்ம்ம். ஒரு வேளை நீங்கள் சொன்னது சரியாக இருக்கலாம். ஒவ்வொரு உயிரினமும் ஒருவேளை மகிழ்ச்சியாக இல்லாமல் இருக்கக்கூடும். உதாரணமாக, பத்திரிகையாளர் கரடியார்.

இந்தப் படத்தில், சிரிப்பதற்கு கரடியார் முயல்கிறார், ஆனால் அவர் பெரும் சோகத்தில் இருக்கிறார். அவருக்கு `ப்ரேக்கிங் நியூஸ்’ க்கான செய்தி கிடைக்கவில்லை. அவர் அதற்காக ஒரு பறவையைக் கூட அனுப்பினார்.

ஏனென்றால் பறவை விரைவாகச் செல்வதோடு சிறந்த கண் பார்வையையும் கொண்டது. ஆனால் அதுவோ எந்தச் செய்தியையும் கொண்டுவராமல் திரும்பி வந்தது.

`ப்ரேக்கிங் நியூஸ்’ செய்தி என்பது கோபம், பயம், வெறுப்பு, பேராசை ஆகியவை பற்றியது, ஆனால் காட்டில் அந்த மாதிரி எதுவும் இல்லை. அனைத்தும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தன.

`ப்ரேக்கிங் நியூஸ்” இல்லாமல் பத்திரிகையாளராக இருப்பதற்குத் தகுதியில்லை என பத்திரிகையாளர் கரடியார் நினைத்தார்.

அவர் ஒரு வெயிட்டர் கரடியாக அல்லது துப்புரவுத் தொழில் செய்யும் கரடியாக அல்லது `நீங்கள் டயல் செய்த எண்ணை சரிபார்க்கவும் அல்லது நீங்கள் வரிசையில் இருக்கிறீர்கள் தயவு செய்து காத்திருக்கவும்’ என்று சொல்லக்கூடிய  தொலைபேசிக் குரல் கரடியாக இருந்திருக்கலாம் என நினைத்தார்.

அவர் தன்னுடைய உடமைகளை எடுத்துக் கொண்டு பஸ் ஸ்டாப்பை நோக்கி நடக்க ஆரம்பித்த போது, பாடிக்கொண்டே ஒரு சர்தார்ஜி மரத்திற்குப் பின்னால் இருந்து வந்தார்.

`ஓ, பத்திரிகையாளர் கரடியாரே! என சர்தார்ஜி கூப்பிட்டார். `எங்கேயாவது போய்க் கொண்டிருக்கிறீரா?”

`அப்படி என்னைக் கூப்பிடாதீர்கள் அல்லது நான் அழுது விடுவேன்’ என்ற கரடியார், நான் ஒரு தொலைபேசிக் குரல் கரடியாக ஆவதற்குப் போய்க் கொண்டிருக்கிறேன் என்றார்.

`வேடிக்கையாக நடந்து கொள்ளாதீர்கள், கரடியாரே!’ என்று சர்தார்ஜி கரடியாரைத் திட்டிக் கொண்டே தனது கிடாரை எடுத்துப் பாடத் தொடங்கினார்.

`நீங்கள் பார்க்கவில்லையா......?” என கிறீச்சிடும் பறவைகளும், அலறும் ஆந்தைகளும் பாடின.

`பாடும் சர்தார்ஜியும்

பத்திரிகையாளர் கரடியாரும் இல்லையென்றால்

உலகம் ஒரு மோசமான இடமாக இருக்கும், நீங்கள் பார்க்கவில்லையா?” என சர்தார்ஜி பாடினார்.

`பத்திரிகையாளர்

கரடி’யாராக இருப்பது குதூகலமாக இருக்கிறது ஏன்று

கரடியார் சோகமாகக்

கூறினார்.

`விஷயங்களைக் கண்டுபிடிப்பதையும், மக்களோடு பேசுவதையும், அவர்களுடைய

கதைகளை எழுதுவதையும் நான் விரும்புகிறேன், ஆனால் ஒரு `ப்ரேக்கிங் நியூஸ்’ கூட என்னிடம் இல்லை,

அப்படியென்றால்.......’

`ஆ-ஹா!” என்று சர்தார்ஜி பாடினார்.

`என்ன’ என கரடியார் குழப்பத்துடன் கேட்டார்.

.

’ நீங்கள் விஷயத்தைக் கண்டறிய விரும்புகிறீர்கள்! மக்களிடம் பேச விரும்புகிறீர்கள்! கதைகள் எழுத விரும்புகிறீர்கள்! நீங்கள் ஒரு பத்திரிகையாளர் கரடியார், கரடியார், ஆனால் உங்களிடம் இருக்கும் ஆன்மாவோ எழுத்தாளர் கரடியார்!”

கரடியார் சிரித்தார். சர்தார்ஜி சரிதான்! கரடியார் உண்மையிலேயே ஒரு எழுத்தாளர்தான்.

"கரடியாரே, நான் என்னவென்று சொல்லட்டுமா’ என சொல்லிக் கொண்டே சர்தார்ஜி, `நீங்களும் நானும் உலகெங்கும் பயணிப்போம். நான் பாடுகிறேன், கரடியாராகிய நீங்கள் எழுதுங்கள். `ப்ரேக்கிங் நியூஸ்” செய்திகள் இல்லை - எப்படியிருந்தாலும் அதை யாரும் மூன்று நாட்களுக்கு மேல் நினைவில் வைத்திருக்கமாட்டார்கள், உண்மையான மனிதர்களின் உண்மையான கதைகள், கதைகள் ஒருபோதும் வளர்வதில்லை.

ஹூரே, என்றார் கரடியார்.

இப்படித்தான் எழுத்தாளர் கரடியாரும், பாடகர் சர்தார்ஜியும் உலகத்தைக் கண்டறியப் புறப்பட்டனர்.

அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் சர்தார்ஜி மக்களிடையே பாட அதைக் கரடியார் கேட்டார். நாளடைவில், கரடியார் பல கதைகளை எழுதினார். மகிழ்ச்சியான கதைகள் மக்களை அழ வைத்தன, வேடிக்கையான கதைகள் அவர்களை சிந்திக்க வைத்தன, சோகமான கதைகள் நம்பிக்கையை ஏற்படுத்தின, பயமுறுத்தும் கதைகள்

அவர்களிடம் சிரிப்பை வரவழைத்தன.

உலகெங்கிலும் இருக்கும் ஸ்டோரீவீவர்ஸ் கரடியாரின் நீண்ட, வலிமையான, பிரகாசமான கதைகளின் வரிசைமுறையை எடுத்துக் கொண்டு அதை அனைவரும் மகிழும்படி அருமையான, புதிய கதைகளாக சொல்ல ஆரம்பித்தனர்.