பழங்குடிச் சிறுவர்கள் அனைவரும் சிவப்புக் கோவணம் அணிகிறார்கள்.
அவை, தங்களுக்கு வலிமை சேர்ப்பதாக நம்புகிறார்கள்.
அப்படியானால் மற்ற சிறுவர்கள், அவர்களைப்போல எல்லா வேலைகளையும்
செய்ய இயலுமா?
சிவப்புக் கோவணம் அணிந்தால் மட்டுமே
சாத்தியம் என்கிறார்கள்.
ஆனால், கயாவால் மட்டும் முடிகிறது!
பழங்குடிச் சிறுவர்களைப் போலல்லாமல், அவன் தினமும் வெவ்வேறு நிறத்தில் கோவணம் தரிக்கிறான்.
"சிவப்புக் கோவணம் அணிந்துள்ள சிறுவர்கள் என்ன செய்ய முடியுமோ, அதை நானும் எனது கோவணங்களும்கூடச் செய்ய முடியும்!"
"என்னைப் போல விறகுகளைத் தேடிக் கண்டுபிடிக்க முடியுமா?" என்று பரோக் கேட்டான்.
"நிச்சயமாக! சிவப்புக் கோவணம் அணிந்துள்ள சிறுவர்கள் என்ன செய்ய முடியுமோ, அதை நானும் எனது நீலப்பச்சை கோவணமும்கூடச் செய்ய முடியும்!"
நோனோய் கேட்டான்.
"என்னைப் போல நீயும் தண்ணீர்
எடுத்துக் கொண்டுவர முடியுமா?"
"நிச்சயம்! சிவப்புக் கோவணம் அணிந்துள்ள சிறுவர்கள் என்ன செய்ய முடியுமோ, அதை நானும் எனது இளம்பச்சை கோவணமும்கூடச் செய்ய முடியும்!"
டோடாங் கேட்டான்:
"என்னைப் போல பலாப்பழம் பறிக்க முடியுமா?"
"ஏன் முடியாது?
சிவப்புக் கோவணம் அணிந்துள்ள சிறுவர்கள் என்ன செய்ய முடியுமோ, அதை எனது இளஞ்சிவப்பு கோவணமும்கூடச் செய்ய முடியும்!"
தினமும் இதுபோன்ற விவாதங்களில் கழிந்தன. ஒவ்வொரு நாளும் தொடர்ந்தது.
ஒரு நாள், கயா ஒரு வினோதத்தைப் பார்த்தான்.
பரோக், மஞ்சள்நிறக் கோவணம் அணிந்திருந்தான்.
நோனோய், வம்மிநிற கோவணமும்,
டோடாங், நீலநிறத்தில் கோவணமும் அணிந்திருந்தனர்.
விரைவில், மற்ற சிறுவர்கள் அனைவரும்
பல நிறங்களில் கோவணம் அணிந்தார்கள். அதை எல்லோரும் பார்த்து ரசித்தார்கள்.
"சிவப்புக் கோவணம் அணிந்துள்ள சிறுவர்கள் என்ன செய்ய முடியுமோ, அதை நாங்களும் எமது கோவணங்களும்கூடச் செய்ய முடியும்!"