இவள் தான் மகா .ஒரு நாள் வானத்தை உற்றுப் பார்க்கிறாள். அங்கு என்ன தெரிகிறது.அவளைப் பின் தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.
மகாவிற்கு வண்ணங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அவள் ஒவ்வொரு வண்ணத்திற்கும் பின் நின்று காண்பிக்கிறாள்.முதலில் நீல வண்ணம் வானமும் நீல வண்ணத்தில் தான் இருக்கிறது.
அடர் நீலவண்ணம் அவள் விதவிதமாக புகைப்படங்களை எடுத்து வைத்து
உள்ளாள்.
இது தான் ஆரஞ்சு வண்ணம்.
இது சிவப்பு வண்ணம் . வாகனங்களை நிறுத்தும் குறியீடு .
ஐ! பச்சை வண்ணம் வாகனங்கள் செல்லலாம் என்பதற்கான குறியீட்டு வண்ணம்.
இது ஊதா. கண்களைப் பறிக்கும் வண்ணம்.
இது தான் மஞ்சள். வாகன்ங்கள் புறப்பட தயாராக இருக்கலாம் என்பதைக் குறிக்கும்.
இப்பொழுது புரிகிறதா? அவள் வானத்தில் என்ன பார்த்திருப்பாள் என்று, அது
தான் வானவில். எவ்வளவு அழகாக வண்ணவண்ணமாக இருக்கிறது.
வண்ணங்களின் பெயர்களை அறிந்த அவள் வானவில்லைப் பார்த்தப்பின் அவளுக்கு அந்த வண்ணங்களில் கிடைக்கும் பொருட்களைச் சேகரிக்க ஆரம்பித்தாள்..நீல பெர்ரி பழத்தை நீல வண்ணத்திற்காக எடுத்தாள்.
ஆரஞ்சு வண்ணத்திற்கு ஆரஞ்சு வண்ண உடை, பூனை, பழத்தையும் எடுத்து காண்பித்தாள்.
மகாவின் தம்பி அணிந்திருக்கும் உடையின் நிறம் சிவப்பு.
மஞ்சள் வண்ணத்திற்காக முட்டையின் மஞ்சள் கரு, வாழைப்பழம், சூரியகாந்திப்பூ ஆகிய அனைத்தையும் காண்பித்தாள்.
ஊதா நிற உடையை அணிந்தவுடன் அவள் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.
அடுத்து என்ன வண்ணாம் என்று பார்க்கலாம்.
பச்சை வண்ண கரும்புத்தோட்டத்தில் பச்சைநிற தவளையும் பார்த்தாள்.ஒவ்வொரு வண்ணங்களையும் ரசித்த அவள் மகிழ்ச்சியோடு இருந்தாள்.வண்ணத்தின் ரசிகை அவள்.