kodu nanbargalin vilaiyaattu

கோடு நண்பர்களின் விளையாட்டு

அகாரா ஒரு நிற்கும் கோடு. லீனியோ ஒரு படுக்கைக் கோடு. இருவரும் மற்ற கோடு நண்பர்களுடன் விளையாடச் சென்றனர். என்ன நடந்திருக்கும்?

- Saalai Selvam

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இவர்கள்தான் அகாரா மற்றும் லீனியோ. இருவரும் நேர்க்கோடுகள். அகாரா ஒரு நிற்கும் கோடு.

லீனியோ ஒரு படுக்கைக் கோடு. வாருங்கள், இவர்களின் மற்ற சில கோடு நண்பர்களையும் சந்திப்போம்.

இங்குள்ள வளைந்த கோடுகளைப் பார்த்தீர்களா? இவர்கள்தான் வில்லு மற்றும் முறுக்கு.

இதுதான் சறுக்கு! இது ஒரு சாய்கோடு.

இந்த நண்பர்கள் எல்லாம் இன்று என்ன செய்யப் போகிறார்கள்? இவர்கள் ஒன்றுசேர்ந்து சில உயிரினங்களை உருவாக்கப் போகிறார்கள்.

இந்த நாயைப் பாருங்கள்!இதில் லீனியோவை கண்டுபிடிக்க முடிகிறதா?

அட, இந்த யானையைப் பாருங்கள்! வில்லு எங்கே, தெரிகிறதா?

இதோ ஆமை! இதில் முறுக்கைக் கண்டுபிடிக்க முடிகிறதா?

அழகு நத்தையார் இதோ! அதோ சறுக்கு, உங்களுக்குத் தெரிகிறதா?

ஹையா, ஆந்தை!அகாரா எங்கே?

உஷ்ஷ்ஷ்! கோடுகளெல்லாம் தூங்குகின்றன. உயிரினங்களை உருவாக்குவது ஜாலியாகத்தான் உள்ளது. ஆனால் பெரிய்ய்ய வேலை!