kolam

கோலம்

பொங்கலன்று இலக்கியா வாசலில் போட்ட கோலம்.

- Kumarasamy K

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

பொங்கல் பண்டிகை இன்னும் ஓரிரு நாட்களில் வந்து விடும். அதற்குள் எப்படியாவது அழகாக கோலம் வரைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று இலக்கியா ஆசைப்பட்டாள். அவள் பார்க்கும் இடங்களிலெல்லாம் கோலம் வரைந்து கொண்டிருப்பாள்.

பொங்கல் பண்டிகையை கொண்டாட மதுரையில் உள்ள தனது பாட்டியின் கிராமத்திற்கு செல்வதற்காக ரயிலில் குடும்பத்துடன் சென்றனர். அந்த ரயில் பெட்டிகளில் கூட இலக்கியா கோலங்களை வரைந்து பயிற்சி செய்து கொண்டிருந்தாள். அவள் வரைந்த கோலங்களைப் பார்த்து எல்லோரும் பாராட்டினர்.

இன்று தைத்திங்கள் முதல் நாள் பொங்கல் பண்டிகை. இலக்கியா மதுரையில் உள்ள பாட்டி வீட்டில் கோலம் வரைவதற்காக வண்ண பொடிகளை எடுத்து வந்து பாட்டியோடு சேர்ந்து அழகாக கோலம் வரைந்து வண்ணமிட்டாள். கோலம் அழகாக இருக்கிறது என்று பாட்டி இலக்கியாவை  பாராட்டினார்.