ஒரு ஊர்ல ஒரு குட்டிப் பாப்பா இருந்தாளாம்.அவளை கொசு ஒன்னு கடிச்சிச்சாம். கொசு கடிச்சதுல இரத்தம் கூட வந்திடிச்சு. பாப்பா ரொம்ப அழ ஆரம்பிச்சிட்டாள்.
உடனே பக்கத்துல இருந்த சிங்கமும் புலியும் அவள்ட வந்து.அழாதே பாப்பா ,
நாங்க உன்னை கடிக்கல , அந்தக் கொசு தான் கடிச்சதுன்னு சொன்னாங்களாம்.அப்படியும் பாப்பா அழுகைய நிறுத்தவேயில்லை.
உடனே புலி , கொசுக்கு ஃபோன் செஞ்சிதாம்.”ஏய் கொசு , ஏன் பாப்பாவை கடிச்ச?ஹ்ம்ம்..இனிமே அப்படி செய்யக் கூடாது..புரியுதா”ன்னு சொல்லிச்சாம்.
யானை,கரடி,தவக்களை எல்லாம் வந்து;”பாப்பா,அழாதே..உனக்கு ஒன்னுமில்ல,எல்லா சரியாடு”ம்னு சொன்னாங்க.
அப்புறம் அவளுக்கு சரியாடிச்சு.கொசுவும் வந்து சாரி கேட்டுடிச்சு.