ஒரு நாள் அதிகாலையில் எழுந்த கிச்சு சோம்பல் முறித்துக்கொண்டே - "மீன் பிடிக்க நேரமாகி விட்டது!" - என்று சொன்னான்.
அவன் குளத்திற்கு போகும் வழியில் அவனது நண்பன் விச்சுவை சந்தித்தான். கிச்சுவும் விச்சுவும் நெருங்கிய நண்பர்கள். நாள்தோறும் சேர்ந்தே விளையாடுவார்கள்.
அவர்கள் இருவரும் மீன்பிடிக்க பரம்பை எடுத்துக்கொண்டு செல்வதை அவர்களது மற்றொரு தோழியான மகி பார்த்தாள்."நாங்கள் மீன் பிடிக்க செல்கிறோம், மகி. நீயும் வேண்டுமானால் எங்களோடு வா!" என்று கூறினார்கள்.
அவர்கள் கூறியதை சிறிது நேரம் யோசித்துப்பார்த்தாள். பிறகு அவர்களைப் பார்த்து "அப்படி செய்யாதீர்கள்! தண்ணீர் இல்லாமல் மீன் இருக்காது!" என்று சொன்னாள்.
அவர்கள் இருவரும் மகி சொன்னதை பொருட்படுத்தவேயில்லை. நேராக குளத்திற்கு மீன் பிடிக்க சென்று விட்டனர்.
கிச்சுவும் விச்சுவும் நீண்ட நேரமாக குளத்தருகே மீனிற்காக காத்துக்கொண்டு இருந்தனர். அப்போது குளத்தில் இரண்டு மீன்கள் நீந்திச் சென்றன. அதில் ஒன்று ஒல்லியாகவும் மற்றொன்று உருண்டையாகவும் இருந்தது.
பின்னர், மூன்றாவதாக இன்னொரு பெரிய மீன் தென்பட்டது. அது அவர்கள் இது வரை பார்த்திராத மிக பெரிய மீன். அதை பார்த்து ஆச்சர்யப்பட்ட மகி, "இந்த மீன் அப்பாவின் பாதங்களை விட பெரிதாக உள்ளது!" என்று கூறினாள்.
கிச்சுவும் விச்சுவும் தங்களுடைய மீன்பிடி பரம்பினை இறுக்கப் பிடித்துக்கொண்டு இழுத்தனர். "அதை விடு, அது என்னுடைய மீன்!" என்று கிச்சு கத்தினான். "இல்லை இல்லை, அது என்னுடைய மீன், நீ விடு!" என்று பதிலுக்கு விச்சுவும் கத்தினான்.
எப்படியாவது அந்த பெரிய மீனை பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில், இருவரும் பலமாக தங்களுடைய பரம்புகளை இழுத்தனர்.
தடார்ர்ர்!!! இரண்டு பரம்புகளும் உடைந்து போய் விட்டன!தொப்பென்று கிச்சு கீழே விழ, மொத்தென்று விச்சு குளத்தில் விழுந்தான்.
ஏன் இப்படி ஆயிற்று? என்ன நடந்திருக்கும்? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?குளத்தில் இருந்த அந்த புத்திசாலி மீன்கள், கிச்சு-விச்சுவின் பரப்புகளில் இருந்து தொங்கிக்கொண்டிருந்த கயிற்றினை ஒன்றோடு ஒன்று முடித்து போட்டு விட்டன.