குமுதாவுக்கு வண்ணத்துப் பூச்சிகளுடன் விளையாட ரொம்ப பிடிக்கும்.
பறவைகள் கூடவும் விளையாடப் பிடிக்கும்.
அவளுக்கு காகிதக் கப்பல் மிகவும் பிடிக்கும்.
அவளுக்கு மண் மாளிகை கட்டி விளையாட விருப்பம்.
குமுதா விளையாடிவிட்டு வீட்டுக்குச் சென்றால்
அவள் அம்மா கை, கால்களை கழுவ சொல்வார்கள்
ஆனால் அவள் செய்யமாட்டாள்.
"எனக்கு சோப்பு பிடிக்காது" என கத்துவாள்.
ஒரு நாள் அவள் கனவில், அவளின் மாளிகையை கிருமிகள் சூழ்ந்து கொண்டன. அவளை தாக்க தொடங்கியது.
கிருமிகள் அவளை துரத்தியது.
அவள் "காப்பாத்துங்க..." "காப்பாத்துங்க..." என கத்திக் கொண்டே ஓடினாள்.
திடீர் என, சோப்பு ராஜா குமிழன் தோன்றினார்.
"குமுதா பயப்படாதே!" என சொல்லி,
குமிழ்களை பார்த்து "அந்த கிருமிகளை தாக்குங்கள்" என்றார்.
சோப்பு குமிழ்கள் அந்த கிருமிகளை தாக்கியது.
அன்று முதல் குமுதா வெளியில் விளையாடி விட்டு வீட்டுக்குள் வந்ததும் சோப்பு போட்டு கை, கால்களை கழுவ மறப்பதே இல்லை.