இவர் ஒரு குண்டு அரசன்.
அந்த குண்டு அரசனிடம் ஒல்லி நாய் ஒன்று இருந்தது.
ஒரு நாள் குண்டு அரசனும் ஒல்லி நாயும் வெளியே நடந்து போனார்கள்.
அந்த ஒல்லி நாய் ஒரு பறவையைப் பார்த்தது.
உடனே அந்த ஒல்லி நாய் பறவையின் பின்னால் துரத்திக் கொண்டு ஓடியது.
அந்த குண்டு அரசன் ஒல்லி நாய் பின்னால் ஓடினான்.
அவர்கள் ஓடினார்கள்…ஓடினார்கள்…ஓடினார்கள்...
ஓடிக் கொண்டே
இருந்தார்கள்...பல நாட்களுக்கு ...
கடைசியில் அந்த குண்டு அரசன்
ஒல்லி நாயைப் பிடித்து விட்டான்.
இப்போது அந்த குண்டு அரசன் ஒல்லி அரசன் ஆகி விட்டான்.