இவர் தான் குண்டூர் தேசத்து கொழுக் மொலுக் குண்டு ராஜா
குண்டு ராஜா ஓர் ஒல்லி நாய் வளர்த்தார்.குண்டு ராஜாவும் ஒல்லி நாயும் ஒருநாள் நடைப் பயிற்சி செய்யப் போனார்கள்.
பறவை ஒன்றை பார்த்த நாய் அதைத் துரத்தி ஓடியது.
ராஜாவும் நாயின் பின்னால் ஓடினார்.
ஓடினார்கள் ஓடினார்கள் பறவைகள் உலக விளிம்பிற்கே ஓடினார்கள்.பல நாள் நீடித்தது அவர்கள் ஓட்டம்.
பாய்ந்து நாயை பிடித்தார் குண்டு ராஜா.
பல நாள் ஓடியதால் குண்டு ராஜா ஆனார் ஒல்லி ராஜா.