kuntuminum kuttiminum

குண்டுமீனும் குட்டிமீனும்

குண்டுமீனும் குட்டிமீனும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வந்தது ஆபத்து...! குட்டிமீன் தப்பிவிட்டது. ஆனால் குண்டுமீன் சிக்கிக் கொண்டது. குட்டிமீன் குண்டுமீனுக்கு எப்படி உதவியிருக்கும்?

- Hemalatha Kanagalingam

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

குண்டுமீனுக்கும் குட்டிமீனுக்கும் ஒரே கொண்டாட்டம்.

வந்தது ஆபத்து.

சின்னத் துவாரத்தின் ஊடாக குட்டிமீன் வௌியே

வந்துவிட்டது. குண்டுமீனுக்கு வரமுடியவில்லை.

குட்டிமீன் சின்னப் பற்களால் கடித்தது.

குண்டுமீன் பெரிய பற்களால் கடித்தது.

குட்டிமீன் உதவி தேடிச் சென்றது.

“என்னுடைய பெரிய நண்பனுக்கு உதவ முடியுமா?”

“வேகமாக வரமுடியாது குட்டிமீன்...” பெரிய ஆமை கூறியது.

“என் நண்பனுக்கு உதவ முடியுமா?”

பெரிய திமிங்கிலத்திடம் கேட்டது.

“என் பற்கள்

வலிமையற்றவை சின்ன குட்டிமீன்...”

“இதோ சின்ன வாள்மீன்...”

“அம்மா, பெரிய குண்டுமீனுக்கும் சின்னக்

குட்டிக்கும் உதவ வேண்டும்...”

எல்லோரும் பெரிய குண்டுமீனுக்கு உதவினார்கள்.

“ய்... யேய்... ய்!”

பெரிய குண்டுமீன் வௌியே வந்தது!

எல்லோரும் மீண்டும் விளையாடச் சென்றனர்.