kurangum mudhalaiyum

குரங்கும் முதலையும்

உண்மையான நட்பு எது?

- Monica Rasna J

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒரு நாள் ஏரிக்கரை அருகிலே குரங்கும் முதலையும் சந்திச்சதாம்.

"நீ எங்க இருந்து வந்த?" என்று குரங்கு கேட்டது. "நானா? அதோ அந்த ஏரியில் இருந்து தான்" என்று முதலை சொன்னது.

"நீ எங்க வசிக்கிற?" என்று முதலைகேட்டது. "நானா? அதோ அந்த மரங்கள் இருக்கே, அங்கேதான்" என்று குரங்கு சொன்னது.

"உனக்கு நீச்சல் வருமா?" என்று முதலை கேட்டது.

"அச்சோ... எனக்கு நீச்சல் எல்லாம் வராதே" என்றதாம் குரங்கு.

"அடடா... அதனால் என்ன, நான் சொல்லி தர்றேன்" என்றது முதலை.

"நம்ம தான் இப்போ நண்பர்கள் ஆகிட்டோமே... நீ பயப்படவே வேண்டாம்" என்றதாம் முதலை.

"குரங்கே குரங்கே... என்னோட மாமா உடம்பு முடியாம இருக்காரு. அவருக்கு கொஞ்சம் மாமிசம் வேணுமாம்" என்றது முதலை.

குரங்குக்கு செம்மயா பயம் வந்துருச்சு. ஒரு வேளை என்னை இவன் சாப்பிட்டு விட போறானோ?

நம்ம எப்டியாவது முதலை கிட்ட இருந்து தப்பிக்கனுமே என்று குரங்கு யோசிச்சது.

குரங்குக்கு திடீர் என்று ஒரு யோசனை வந்துச்சு.

"முதலை அண்ணா... நான் வேணும்னா அவருக்கு என்னோட இதயத்தையே தரேன்," என்று குரங்கு சத்தியம் செய்தது.

"ஆனா... என்னோட இதயத்தை அங்க நிலத்துல விட்டுட்டு வந்துட்டேனே," என்று குரங்கு பாசாங்கு செய்தது.

"சரி சரி... அங்கே இருந்து இதயத்தை எடுத்துட்டு வருவியா?" என்று முதலை கேட்க, "கண்டிப்பா உனக்காக பண்ணுவேன்"

என்றதாம் குரங்கு.

முதலை மீண்டும் கரைக்கு குரங்கை கூட்டிக்கொண்டு வந்தது. அவ்ளோதான் தப்பிச்சோம்... என்று நாலு கால் பாய்ச்சலில் குரங்கு மரங்களுக்கு தாவியது.

"அடேய் ஏமாத்துக்காரா... நீ என்னோட நண்பனே இல்லை" என்று முதலை கத்தியது.

"ஆமாம்... நம்ம இனிமே நண்பர்கள் இல்லை. நீ தான் என்னை சாப்பிட நினைத்தாயே" என்று குரங்கு சொன்னது.