எங்கள் குடும்பத்தில் நாங்கள் நான்கு பேர். நான் சிங்குவை எல்லா இடத்திற்கும் தொடர்ந்து செல்வேன்.
சிங்குவை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு என்னுடையது. ஏன் என்றால் நான் தான் இங்கு மூத்தவன்.
சில நேரம் சிங்கு கவனக்குறைவாக இருப்பான். அப்போது வீட்டைப் பார்த்துக்கொள்வது என் கடமை.
நாங்கள் எல்லாவற்றையும் ஒன்றாகத் தான் செய்வோம். நாங்கள் ஒன்றாக படிப்போம்.
நாங்கள் ஒன்றாக விளையாடுவோம்.
அம்மாவிடம் திட்டு வாங்குவதும் ஒன்றாகத் தான் வாங்குவோம்.
சிங்கு பள்ளிக்குச் சென்றிருக்கும் போது, நான் அம்மாவிற்கு உதவுவேன். காகங்கள் அப்பளத்தை நெருங்காமல் பார்த்துக் கொள்வேன்.
இன்று சிங்கு என் ஆசிரியராக இருப்பான். நான் புதிதாக ஏதோ கற்றுக் கொள்ளப் போகிறேன்.
நான் ஒரு நல்ல நாய் குட்டி. நான் பூனைகளை விரட்ட மாட்டேன்.
நீங்கள் சிங்குவின் நண்பரா? அப்போது நீங்கள் என் நண்பரும் கூட.
பின்வரும் செயல் வாக்கியங்களை படியுங்கள். இவற்றில் உங்களுக்கு என்னவெல்லாம் செய்ய பிடிக்கும்?
எனக்கு நடனம் ஆட பிடிக்கும்.
எனக்கு நீச்சல் அடிக்க பிடிக்கும்.
எனக்கு தாவி விளையாடுவது பிடிக்கும்.
எனக்கு ஓவியம் வரைவது பிடிக்கும்.
எனக்கு சைக்கிள் ஓட்டுவது பிடிக்கும்.
எனக்கு மலை ஏறுவது பிடிக்கும்.
சில நேரம் நாம், "நாய் போல விசுவாசம்", என்று கூறுவோம். நாய் தன் உரிமையாளரை தொடர்ந்தே செல்லும் என்பது தான் இதற்கு காரணம். நாய், வழி தவறி போனாலும், அது தன் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிடும்.