kutti oviyargal

குட்டி ஓவியர்கள்

வண்ணம் பூசுவது ஒரு மகிழ்வான நிகழ்வு. ஆனால் அந்த கதவிற்கு என்ன வண்ணம் பூசுவது?

- அகரன்

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

கோடை விடுமுறை நாளில் வினாவும் வினையும் தோட்டத்திற்கு சென்றனர். அங்கே பல வண்ணக்கலவை டப்பாக்கள் எங்கும் நிறைத்திருந்தன.

அதில் வெள்ளை, சிவப்பு, பச்சை, நீலம், மற்றும் மஞ்சள் நிற வண்ணங்கள் இருந்தன.

வண்ணம் பூசுபவர்கள் வேலையில் மும்முரமாக இருந்தனர். ஒருவர் ஏணியிலும் மற்றோருவர் சாளரத்திலும் இருந்தனர். “நாங்கள் உங்களுக்கு உதவலாமா?” என்று வீனாவும் வினையும் கேட்டனர்.

அந்த வண்ணம் பூசுபவர் அவர்கள் இருவருக்கும் தூரிகைகளை கொடுத்து “அந்த கதவின் உட்புறம் பூசு.” என்று வீனாவிடமும், “வெளிப்புறம் பூசு.” என்று வினயிடனும் கூறுகிறார்.

அந்த வண்ணம் பூசுபவர் அவர்கள் இருவருக்கும் தூரிகைகளை கொடுத்து “அந்த கதவின் உட்புறம் பூசு.” என்று வீனாவிடமும், “வெளிப்புறம் பூசு.” என்று வினயிடனும் கூறுகிறார்.

இருவரும் இரண்டு வண்ண டப்பாக்களை எடுத்துக்கொண்டு வேலைக்கு சென்றனர். வீனா ஒரு புறமும், வினை மறுபுறமும் அந்த கதவிற்கு வண்ணம் பூசினர்.

அவர்கள் பூசிய வண்ணம் தரையிலும் சுவற்றிலும் அவர்கள் மீதும் தெளித்தது.

வேலை முடிந்ததும் அவர்கள் சுவரிலும் தரையிலும் தெளித்த வண்ணங்களை துடைத்து சுத்தம் செய்தனர்.

அவர்கள் மீதிருந்த வண்ணங்களையும் துடைத்துக்கொண்டனர்.

“இந்த சிவப்பு வண்ண கதவு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்றாள் வீனா.

“இந்த பச்சை வண்ண கதவு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்றான் வினய்.

“இப்படி கதவுக்கு இரண்டு வண்ணம் பூசிட்டீங்களே!” என்று வண்ணம் பூசுபவர் அதிர்ச்சி அடைந்தார்.

“பரவாயில்லை, அப்படியே இருக்கட்டும்!” என்றார் அவர்கள் அம்மா.