"நான் தொலைஞ்சு போய்ட்டேன். எனக்கு வீட்டுக்குப் போகணும். எனக்கு உதவி செய்வீங்களா யானையாரே?" என்று அழுதது குட்டித்தேனீ.
"குட்டித் தேனியே, இந்தக் கூடா உன் வீடு?" என்று கேட்டது யானை.
"இல்லை. இது ஒரு பறவையோட வீடு." என்று அழுதது குட்டித்தேனீ.
"இந்தக் குகையா உன் வீடு?" என்று கேட்டது யானை.
"இல்லை! இது வௌவாலோட வீடு."
"இந்தத் தேன்கூடா உன் வீடு?"
"ஆமாம்! இதுதான் என் வீடு." என்று மகிழ்ச்சியில் துள்ளியது குட்டித்தேனீ.
"எனக்கு உதவி செஞ்சதுக்கு ரொம்ப நன்றி யானையாரே".