layaa teacherin arputha motor baikirkku pasi

லயா டீச்சரின் அற்புத மோட்டார் பைக்கிற்கு பசி!

விளையாட்டு சொல்லிக் கொடுக்கும் லயா டீச்சர், தனது அற்புத மோட்டர் பைக்கின் உதவியோடு பாய்ந்து சென்று பிறருக்கு உதவி செய்வதில் மிகவும் விருப்பம் உள்ளவர். இம்முறை பசித்திருந்த அவரது அற்புத மோட்டர் பைக்கிற்கான சிறப்பு உணவைத் தேடிச் செல்வதைப் பாருங்கள்! இப்புத்தகம், ‘லயா டீச்சரும், அவரது அற்புத மோட்டர் பைக்கும்' என்னும் கதைத்தொடரின் இரண்டாவது புத்தகம் ஆகும்.

- Rajam Anand

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

“போய் வருகிறேன், குழந்தைகளே!” என்றார் விளையாட்டு ஆசிரியரான லயா டீச்சர்.

அந்த ’பெரிய மரம் பள்ளி‘யில் அப்போதுதான் அவரது வகுப்பு முடிந்திருந்தது.

நூர் குதித்தாள்   —

தம், தம், தம்!

சீனி கை தட்டினான் —

பட்-பட், பட்-பட், பட்-பட்!

பட்டு எண்ணத் தொடங்கினாள் —

“ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, ஐந்து, நான்கு,

மூன்று, இரண்டு, ஒன்று – கிளம்பு!”

அற்புத மோட்டார் பைக் மெதுவாக கிளம்ப ஆரம்பித்தது. டுர்ர்...ட்ர்ர்ர்...

அடடா! லயா டீச்சரின் அற்புத மோட்டார் பைக்கில் என்ன கோளாறு?

அதற்கு... பசிக்கிறது!

லயா டீச்சர், பைக்கை மெதுவாக ஓட்டிக் கொண்டு

ஒரு வித்தியாசமான உணவகத்திற்குச் சென்றார்.

அது ஒரு சூரிய ஆலை!

லயா டீச்சரின் அற்புத மோட்டார் பைக்,

அற்புத உணவு உண்ணும் நேரம் வந்து விட்டது!

அது என்ன சாப்பிடும்?

முட்டையா? பிஸ்கட்டா? பெட்ரோலா?

இல்லை, இல்லை!இந்த அற்புத மோட்டார் பைக் சூரிய சக்தியைக் குடிக்கும்!மடக், மடக், மடக்... ஏவ்வ்!

லயா டீச்சர் ஒலிப்பானை அழுத்துகிறார். அற்புத மோட்டார் பைக் என்ன சொல்கிறது?

கீங்க்–கீங்க் என்கிறதா? ஹாங்க் என்கிறதா?

பீப் என்கிறதா?

இல்லை!

அற்புத மோட்டர் பைக் ஏப்பம் விட்டது!

”ஏவ்வ்வ்வ்!”

இப்போது  லயா டீச்சரும், அற்புத மோட்டார் பைக்கும் கிளம்புவதற்குத் தயார்!

தீபா குதிக்கிறாள் —

தம், தம், தம்!

ஜஹீர் கை தட்டுகிறான் —

பட்-பட், பட்-பட், பட்-பட்!

பீட்டர் எண்ணத் தொடங்கினான் —

“ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, ஐந்து, நான்கு,

மூன்று, இரண்டு, ஒன்று – கிளம்பு!’’

லயா டீச்சரும், அவரது அற்புத மோட்டார் பைக்கும்,

அடுத்ததாக எங்கே செல்வார்கள்?

அடுத்த வாரம் தெரிந்து கொள்ளுங்கள்!