maatruth thiranaali sirumi

மாற்றுத் திறனாளி சிறுமி

மாற்றுத் திறனாளி சிறுமி சாட், ஒரு பூவை எப்படிப் பார்த்தாள் தெரியுமா?

- கொ.மா.கோ. இளங்கோ

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

சாட், பார்வைக்

குறைபாடுடன் பிறந்தாள்.

அவள், இதுவரை

பெற்றோரையோ, சகோதர சகோதரிகளையோ

கண்ணால்

பார்த்ததில்லை.  முகங்களைத் தொட்டுப்பார்த்து புரிந்து கொள்கிறாள்.

ஒரு நாள், சாட் தோட்டத்தில் உலாவிக்

கொண்டிருந்தாள்.

பூக்களின் நறுமணம்  மனதைக் கவர்ந்தது.

அவற்றின்

மென்மையான  இதழ்களைத்

தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டாள்.



சாட், ஒரு தடவையாவது பூக்களைக் கண்களால் பார்க்க விரும்பினாள்.

"பூக்கள் எவ்வளவு அழகானவை."

தனக்கு தானே சொல்லிக்கொண்டாள்.

தினமும், தவறாமல் தோட்டத்துக்குச்

செல்கிறாள். தோட்டத்துப் பாதை

பழக்கமாகி விட்டது.

இன்று அவள்,

ஏதோ சத்தம் கேட்டு வானத்தை

அண்ணாந்து

பார்த்தாள்.

திடீரென்று,

இடி இடித்தது.

மின்னல் வெட்டியது.

"நான், சீக்கிரம் வீடு திரும்ப வேண்டும்." என்று முடிவுசெய்தாள்.

மழை பெய்யத் தொடங்கியது.

ஈரப்பாதை

வழுக்கியதால்

நிலைதடுமாறி

கீழே விழுந்தாள்.

ஒரு கல்லில் மோதி தலையில் அடிபட்டது.

சாட், கண்விழித்தபோது

அவளைச் சுற்றி குடும்பத்தார் நின்றிருந்தார்கள்.

"என்ன நடந்தது?" என்று கேட்டாள், சாட்.

"நீ, கீழே விழுந்ததால் தலையில் அடிபட்டுள்ளது." என்றார் அப்பா.

"கடவுளுக்கு நன்றி.

இப்போது, நீ நலமோடு இருக்கிறாய்."

என்றார் அம்மா.

"அப்பா,அம்மாதானே?"

உறுதி செய்துகொண்ட  சாட், சகோதர சகோதரிகளைப் பெயர் சொல்லி அழைத்தாள்.

"தயவுசெய்து, எனக்கு

ஒரு பூ பறித்துத் தாருங்கள்." என்றாள்.

எல்லோரும் ஆச்சரியம் அடைந்தார்கள்.

அவளது தங்கை,

செடியில் இருந்து

ஒரு பூ பறித்து வந்தாள்.

அதை மென்மையாகப் பிடித்து கையில் வைத்துக்கொண்டாள்.

பிறகு சொன்னாள்,

"இது மிகவும் அழகாக இருக்கிறது."

அவளுடைய குடும்பத்தார் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

உடனே அம்மா கேட்டார்,

"சாட், உன்னால்

இந்தப் பூவைப்

பார்க்க முடிகிறதா?"

கையில் பூவுடன் விளையாடிக்

கொண்டிருந்த சாட்,

சிரித்தபடியே சொன்னாள்.

"நீங்கள் எல்லோரும் இந்த பூவைப் போலவே மிகவும் அழகாக இருக்கிறீர்கள்."