சிவப்பு சேவலுக்கு ஒரு கம்பீரமான மகுடம்.
"என் மகுடம் எங்கே ?" எனக் கேட்டான் நிக்கில்.
நிக்கில், சேவலின் மகுடத்தைக் கேட்டான்.
"முடியாது, என் மகுடத்தை உன்னிடம் கொடுக்க முடியாது !" என்றது சேவல்.
தோகை மயிலுக்கு ஒரு வண்ண மகுடம்.
"என் மகுடம் எங்கே ?" எனக் கேட்டான் நிக்கில்.
நிக்கில், மயிலின் மகுடத்தைக் கேட்டான்.
"முடியாது, என் மகுடத்தை உன்னிடம் கொடுக்க முடியாது !" என்றது மயில்.
வெள்ளை நாரைக்கு ஒரு அழகான மகுடம்.
"என் மகுடம் எங்கே ?" எனக் கேட்டான் நிக்கில்.
நிக்கில், நாரையின் மகுடத்தைக் கேட்டான்.
"முடியாது, என் மகுடத்தை உன்னிடம் கொடுக்க முடியாது !" என்றது நாரை.
"போதும் சேவலே !
போதும் மயிலே !
போதும் நாரையே !
உங்கள் மகுடங்களை நான் எடுக்க மாட்டேன் !"
"எனக்கு வேறு எந்த மகுடமும் தேவையில்லை !
நான், இந்த தாளைப் பயன்படுத்தி என் மகுடத்தை உருவாக்கப்போகிறேன் !"