வாருங்கள் வாருங்கள், குப்பைகளைப் பிரிப்போம்.
மக்கும் குப்பைக்கொரு தொட்டி, மக்காத குப்பைக்கொரு தொட்டி.
தட்டில் சட்டியில் சோற்று மிச்சங்கள்,
தண்டுகள் தழைகள் பழத்தோல்கள்,
கொழகொழ வழவழ குப்பைகள்,
செல்லப்பிராணியின் எச்சங்கள், அழுகும் குப்பைகள், வாரிடுங்கள்.
பிளாஸ்டிக் ரப்பர் எனத் தேடி,
பிரித்தே வைப்போம் தனித்தனியாய்!
காகிதம் குண்டூசி கண்ணாடி,
அறிவோம் மக்கும் குப்பைகளை,
பிரிப்போம் மக்காக் குப்பைகளை.
குப்பையைத் திறம்படக் கையாளுங்கள்.
குறையுங்கள், கொட்டுங்கள், மறுசுழற்சி செய்யுங்கள்.
அவசரம், அலட்சியம் வேண்டாமே, குப்பையில் அக்கறை காட்டிடுவோம்!