இப்ப அமெரிக்காவில் எல்லாரும் துங்கி கொண்டிருப்பார்கள் என்று
அப்பா சொன்னதற்கு ஒரே அழுகை
நல்லா வெளிச்சமாத் தானே இருக்கு ஏன் அமெரிக்காவில் அத்தை தூங்குகிறாள்.
அதற்கு அப்பா சொன்னார்கள் இந்தியாவில் பகல் என்றால் அமெரிக்காவில் இரவு.
பூமி உருண்டையான பந்து போல் நினைச்சு பார்த்தா இந்தியாக்கு நேர் எதிரே அமெரிக்கா இருக்கிறது.
பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது அதனால் இந்தியாக்கு சூரியன் தெரியும் பொழுது அமெரிக்காவிற்கு நிலாதான் தெரியும்.
அதனால் நீ சூரியன் வைத்து விளையாடும் பொழுது ஹரிணி நிலா வைத்து விளையாடுவாள்
சரிப்பா இப்ப நான் சூரியன் வைத்து விளையாடுகிறேன் இரவானதும் நிலா கிடைத்துவிடும் அது கூடவும் விளையாடலாம்