manu s dream

மனுவின் கனவு

மனு என்கிற விளையாட்டு சிறுமி ஓய்வை பற்றி அறிந்து கொள்கிறாள் .

- Keerthi Anand

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒரு அழகான ஊரிலே

ஒரு பெண் இருந்தாள். அவள் பெயர் மனு. அவள்  ஆறு வயது சிறுமி.

அவளுக்கு எப்போதும்  விளையாட பிடிக்கும் .

அவளுக்கு இரவு பகலாக விளையாட பிடிக்கும்.

காலையில்  இருந்து  மாலை வரை விளையாடுவாள் .

ஒரு நாள்  அவள் வீட்டிற்க்கு  உடம்பை  சொரிந்து கொண்டே வந்தாள்.

அவள் உடம்பில்  சிவப்பு புள்ளிகளை பார்த்தாள்.

மனு  அவள் அம்மா விடம் சென்று விளையாட போகலாமா   என்று கேட்டாள் .ஆனால்  அம்மா சம்மதிக்கவிலை ஏனெனில் அவளுக்கு  அம்மை நோய்  வநதிருத்து .

மனு உனக்கு அம்மை வந்திருக்கு

அம்மா, விளையாட போகலாமா ?

மனு வீட்டில் தனியாக இருந்தாள். அம்மா  சொன்னாள்   "மனு, நீ வீட்டிலே இருந்தால் குணம் ஆகி விடுவாய்  பிறகு  நீ விளையாட செல்லலாம் ".

அவள் வீட்டிலயே  இருந்து ஓய்வு எடுத்தாள். அவள் தூக்கத்தில் மிட்டாய்களை பத்தி  கனவு கண்டாள்.

எனக்கு  மிட்டாய் பிடிக்கும் .

மனு ஓய்வு எடுத்து கொண்டாள், அம்மா அவளுக்கு மருந்தும் பாலும் தந்தாள்.

மனு குணம் அடைந்தாள், அம்மா அவளுக்கு ஒரு மிட்டாய் தந்தாள். மனு  மகிழ்ச்சி  அடைந்தாள், பிறகு கூறினாள் "அம்மா எனக்கு உன்னை  பிடிக்கும்".

மனு விளையாட ஆறபித்து விட்டாள் .