marangalum chedigalum nam nanbargal

மரங்களும் செடிகளும் நம் நண்பர்கள்

வாருங்கள், பல விதமான தாவர வகைகளைப் பற்றித் தெரிந்துக் கொள்ளலாம்.

- Tamil Montessori

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

தாவரங்களும் மரங்களும் வளர நெடுங்காலம் ஆகும். முதலில் நாம் விதை விதைக்க வேண்டும்.

அந்த விதை ஒரு மென்மையான விதையிலையாக வளரும். அதற்கு தவறாமல் நீர் ஊற்றினால், பசுமையாக இருக்கும். இளஞ்செடிக்கு வலுவூட்ட கொஞ்சம் உரம் இட வேண்டும். அதனால் அந்த இளஞ்செடி வேகமாக வளர்வதைக் காண்பீர்கள்.

நம்மைச் சுற்றி பல வகையான தாவரங்களைப் பார்க்கிறோம் -

பெரிய மரங்கள்,

சுவர் மீது ஏறும்

தாவரங்கள், தரையில் படரும் தாவரங்கள், புதர்கள், தரையைத் தொடும் புதர்களின் கிளைகள், கிழங்குகள்.

தண்ணீரில் நீர் வாழ் தாவரங்கள் வளர்கின்றன. அவற்றில் சில நீர் மேற்பரப்புக்குக் கீழ் வளர்கின்றன, சில மேலே பூக்கின்றன. சிங்காரக்கொட்டைகள் (வாட்டர் செஸ்ட்நட்) மற்றும் நீர் பாசி (டக் வீட்) நீரின் ஆழ்ந்த இடங்களில் வளர்கின்றன. தாமரைகளும் ஆம்பல்களும் நீரின்மேல் பூக்கின்றன.

உயரமான மரங்கள் இருக்கின்றன. அடர்த்தியான தண்டுகளைக் கொண்ட மரங்களும் இருக்கின்றன. மரங்கள் வசந்த காலத்தில் பச்சையாகவும், இலையுதிர் காலத்தில் உலர்ந்தும் காணப்படுகின்றன. சில மரங்கள் கோபுரம் போல நிமிர்ந்து நிற்கின்றன. சில மரங்கள் பூக்கள் அல்லது பழங்களைக் கொண்டு வளைந்து காணப்படுகின்றன. மரங்கள் வெவ்வேறு வடிவங்களில் உள்ளன.

"மரங்கள் பல  நன்மைகளைத் தருகின்றன. வெயிலாக இருக்கும்போது நிழலைத் தருகின்றன. நாம் உயிர் வாழத் தேவையான பிராணவாயுவையும் (ஆக்ஸிஜன்) உணவையும் தருகின்றன. ஆகவே நாம் மரங்களை நடுவோம். அவை என்றென்றும் நம் நண்பர்கள்", என்று ஆசிரியைக் கற்பித்தார்.