mazhai

மழை

உங்களுக்கு மழை பிடிக்குமா? மழை கொட்ட ஆரம்பிக்கும் பொழுது இவையெல்லாம் நீங்கள் செய்யலாம்!

- Srividya Padmanabhan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

எனக்கு தண்ணீர் பிடிக்கும்.

எனக்கு தண்ணீருடன் விளையாடுவது பிடிக்கும்.

மழை பெய்கிறது.

மழை நமக்கு தண்ணீரை தருகிறது.

எனக்கு வெளியே விளையாடுவது பிடிக்கும்.

ஆனால் மழை பெய்கிறது.

எனக்கு  வெளியேமழையில் விளையாடுவது பிடிக்கும்.

மழையில் விளையாடியதால் என் தலைமுடி ஈரமாக இருக்கிறது.

என் அப்பா என் தலைமுடியை சரி செய்கிறார்.