சுகியா மாமா பிடவுனா கிராமத்தை சேர்ந்தவர். ராஜஸ்தானிலேயே பாடகர்களுக்கு மிகவும் பெயர் பெற்றது பிடவுனா கிராமம். சுகியா மாமாவின் இனிய பாட்டுகள் இல்லாமல் ஒரு கொண்டாட்டமும் நிறைவு பெறாது.
அன்று அவருக்கு ஜலாவுறா கிராமத்திலிருந்து அழைப்பு வந்திருந்தது.
சுகியா மாமா தன் நீளமான மீசையை முறுக்கி விட்டுக்கொண்டு கிளம்பினார் மல்ஹார் ராகத்தில் பாடினார். ஓ! உருளும் மேகங்களே... என்னிடம் ஓடி வாருங்களேன்...
திடீரென்று துப் துப் துப் துப் என்று சத்தம் கேட்டது.
அவருடைய பாட்டுக்கு யாராவது தாளம் போடுகிறார்களா என்ன?
பார்த்தால், டைனோசர் டீனு அவரை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான். சுகியா மாமாவுக்கு அவனைப் பார்த்ததும் ஒரே குஷி.
இவ்வளவு பெரிய ரசிகன் தினமும் கிடைப்பது கடினம் அல்லவா!
உருளும் மேகங்களே, என்னிடம் ஓடி வாருங்களேன்! பூப்போல் மழையைத்தான்
என் மீது தூவுங்களேன்…
சுகியா மாமாவும் டீனுவும் சேர்ந்து பாடிக்கொண்டே தாளத்துக்காக ஒரு குட்டி ஆட்டமும் போட்டனர்.
மேகங்கள் அவர்கள் சொல்வதை கேட்டுத்தானே ஆக வேண்டும்!
மின்னல் மின்னியது, காற்றும் ஆடியது, கருமேகங்கள் உருண்டு திரண்டு வந்தன.
சுகியா மாமாவும் டீனுவும் மகிழ்ச்சியில் சிரித்தனர்.
மழை ஜோராக பெய்யத் தொடங்கியவுடன் சுகியா மாமாவும் டீனுவும் ஒரு சிறிய குடையைப் பகிர்ந்து கொண்டனர். இருவரும் ஜலாவுறா கிராமத்தை நோக்கி சுவையான பக்கோடாவின் மணத்தைப் பின்தொடர்ந்து, பாடிக் கொண்டே சென்றனர்.
...ஓ நன்றி நன்றி... ரம்மியமான மழைக்கு நன்றி... ஊ ல ல லா…
அன்பு வாசகரே,
நீங்கள் எப்பொழுதாவது டைனோசாரை பார்த்திருக்கிறீர்களா?
அவை பாட்டு பாடியிருக்கும்
என்று நினைக்கிறீர்களா?
உங்களுக்கு மழையில்
என்ன செய்ய பிடிக்கும்?
மழை பெய்யும்போது
உங்களுக்கு என்ன
தின்ன பிடிக்கும்?
#6FrameStoryChallenge: ஓவியத் திருவிழா
இந்த புத்தகத்தின் அனைத்து விளக்கப்படங்களும் ப்ரதம் புக்ஸ் நடத்திய #6FrameStoryChallenge என்ற போட்டியிலிருந்து எடுத்தவை. ஒரு கதையை ஆறே விளக்கப்படங்கள் மூலம் குழந்தைகளுக்கு கூறுவது இந்த போட்டியின் நோக்கம். இந்நிகழ்வில் ஏறக்குறைய 70 ஓவியர்கள் பங்கேற்று இந்தியாவின் முதல் குழந்தைகளுக்கான திறந்த மூல கதைப் பதிப்பிக்கும் தளத்துக்கு நேரத்தையும் ஆற்றலையும் வழங்கினர். ஒரு சோதனை முயற்சியாக தொடங்கியது ஓவியத் திருவிழாவாகி, 500 புதிய ஓவியங்களை உருவாக்கப் பட்டது. இந்த வார்த்தைகளற்ற கதை ஓவியங்கள் மொழி எல்லைகளைக் கடந்து பல சாத்தியங்களைக் கொண்டவை. ஸ்டோரிவீவரின் பங்கேற்பாளர்களுக்கு இவற்றை வைத்து புதிய கதைகள் படைக்க வாய்ப்பளிக்கின்றன. இந்நிகழ்வு கூட்டுமுயற்சியின் பலனைக் காட்டுவது. ஒவ்வொரு குழந்தையின் கையிலும் ஒரு புத்தகம் என்ற எங்கள் நோக்கத்தை உறுதிப்படுத்துவது.