meena s house rats

மீனா வீட்டு எலிகள்

meena's house rats

- myfirstschool international

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இவள்  தான் மீனா .இவள்  வீட்டில்  பூனை  வளர்க்கிறாள். அவளது  வீட்டில்  இரண்டு   எலிகள்  இருக்கின்றன .அவைகள் அவளுக்கு தொல்லை தருகின்றன.

மீனா   பூனையை  பாசமாக  பார்த்து  வளர்த்து வந்தாள்.அது   அவளோடே  தான்  இருக்கும். அவள் வீட்டில்  வெல்லம் உணவிற்காக  வைத்து  இருப்பாள்.

அந்த  இரண்டு  எலிகளும் எப்போதும் அவள் உணவுப்பொருட்களை  எடுத்துச்சென்று   அதனுடைய  கூட்டிற்குள் வைத்துக்கொள்ளும்.

அதனால்  அவள்  வெல்லத்தை  பத்திரமாக  பாத்திரத்தில் வைத்தாள்.அப்போதும் அந்த திருட்டு எலிகள் மறைந்து  அதனைக் கவனிக்கின்றன.

மீனா  சென்ற பிறகு அவைகள் வெல்லத்தைத் திருடிச் சென்றன.

அடுத்த நாள்  அந்த திருட்டு  எலிகள்  அவள்  பால்  வைக்கும்  இடத்தை  திருட்டுத் தனமாகப் பார்க்கின்றன.

அவள் இல்லா சமயத்தில் வெல்லத்தைத் திருடி  எடுத்துச்சென்று  மகிழ்ச்சியாய்

தின்று வயிறு நிரம்பியது.அப்பப்பபா! எவ்வளவு பெரிய வயிறு.என்ன கொண்டாட்டம்  இந்த எலிகளுக்கு ......

இதனை அறிந்த  மீனா. பூனையிடம் கூறி அந்த திருட்டு  எலிகளைப் பிடிக்கச் சொன்னது.பூனையைக் கண்டவுடன் அந்த எலிகள்  தூக்க முடியதா தன் வயிற்றை

தூக்கிக்கொண்டு  ஓடி ஒளிந்து  கொண்டது.