ஒரு நாள் நானும் எனது தங்கையும் சாலை அருகில் நடந்து சென்றோம்
பெரிய லாரி ஒன்று மலையிலிருந்து கீழே இறங்கியது
கார் ஒன்று வேகமாக மலையை நோக்கிச் சென்றது
லாரி ஓட்டுனர் தனது மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். சாலையை அவர் பார்க்கவே இல்லை
லாரி கார் மீது மோதியது
மருத்துவ அவசர ஊர்தியும் காவலர்களும் உடனடியாக உதவிக்கு வந்தனர்
இரண்டு இழுப்பு லாரிகள் வந்தது. ஒன்று லாரியை இழுத்துச் சென்றது. மற்றொன்று காரை இழுத்துச் சென்றது.
நடந்த எல்லாவற்றையும் நாங்கள் பார்த்தோம். நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.