“அம்மா, இந்த சப்பாத்திய எப்பிடி செய்றீங்க?”
“இந்த மென்மையான குட்டிக் குட்டி உருண்டைகள வெச்சுதான்.”
“இந்த உருண்டைகள எப்பிடி செய்றீங்க?”
“இந்த வெள்ளையான மாவில் இருந்து.”
“இந்த மாவு எங்க இருந்து வருது?”
“தங்க கலர்ல இருக்கற கோதுமையில இருந்துதான்.”
“இந்த கோதுமை எங்கிருந்து வருது?”
“அத வயல்ல வளர்க்கிறோம்.”
“நாம கோதுமைய எப்படி வளர்க்கிறோம்?” “வயல்ல விதை போடுவோம். மழை வந்ததும் அது செடியா வளரும். நாமளும் வயல்ல நிறைய வேலை செய்வோம்.” “அப்புறம்?”
“செடியெல்லாம் வளர்ந்து, கதிரெல்லாம் முத்தி நிக்கும். அத நாம அறுவடை செய்வோம்.”
“அதுக்கு அப்புறம்?”
“நமக்கு மணிமணியான கோதுமை கிடைக்கும். அதில இருந்து நம்ம மோனாவுக்கு அவளோட சப்பாத்தி கிடைக்கும்!”
“நல்லா உப்பின சூடான சுவையான சப்பாத்தி!”