moondru poonaikkuttigal

மூன்று பூனைக்குட்டிகள்

அந்த மூன்று பூனைக்குட்டிகள் ஒரு நாயைப் பார்த்து பயந்து ஓடின. ஓடின, ஓடின ... ஒரு குளம் வரை ஓடின. பிறகு என்ன ஆனது?

- Logu Venkatachalam

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒரு நாள் மூன்று பூனைக்குட்டிகள் ஒரு நாயைச் சந்தித்தன.

பூனைக்குட்டிகள்  அந்த நாயைப் பார்த்து பயந்துவிட்டன.

பூனைக்குட்டிகள் ஓடின.

நாயும் அவர்களுடன் ஓடியது.

பூனைக்குட்டிகள் வேகமாக ஓடின.

பூனைக்குட்டிகள் ஒரு பறவையைச் சந்தித்தன.

ஆனால், பூனைக்குட்டிகள் மீண்டும் ஓடின.

பூனைக்குட்டிகள் ஒரு பையனைச் சந்தித்தன.

ஆனால், பூனைக்குட்டிகள் மீண்டும் ஓடின.

பூனைக்குட்டிகள் ஒரு நீளமான கட்டையை நோக்கி ஓடின.

ஓ, ஓ!

நாம் இப்போது ஒரு ஆபத்தில் இருக்கிறோம்.

"உதவி! உதவி!"

நாய் அவர்களிடம் ஓடி வந்தது.

"உங்களோடு ஓடியதற்கு மகிழ்ச்சி!" அந்த நாய் சொன்னது.

ஆச்சரியம்!

பூனைக்குட்டிகளுக்கு ஒரு நண்பன் கிடைத்தான்.