மோருவின் விருப்பு வெறுப்புகள் ஆழமானவை. அவனுக்கு ஏதேனும் பிடித்தால் மிகவும் பிடிக்கும்; பிடிக்காதது அறவே பிடிக்காது.
அவனுக்குப் பிடித்ததை அவன் செவதை யாராலும் நிறுத்த முடியாது, அதேபோல் அவனுக்குப் பிடிக்காததை செய வைக்கவும் முடியாது.
மோருவிற்கு மரத்தில் ஏறி
மாங்கா திருடப் பிடிக்கும்.
அடர்ந்த காட்டில் உள்ள
சிறுத்தையைப்போல்
பாவித்துக்கொண்டு மரத்தில் ஊரவும், ஒளிரும் தலையுடைய ஊதா பூச்சி, வெட்டுக்கிளி, துகள் உதிரும் மஞ்சள் வண்ணத்துப்பூச்சி போன்றவற்றைப் பிடிப்பதும் அவனுக்கு விருப்பமானது.
பட்டம் விடவும் அவனுக்கு பிடிக்கும். உயரமான கூரையில் ஏறி, அவன் தனது பட்டத்தை சூரியனை
அடையப் பறக்கும் பருந்துபோல் மேலே பறக்கவிடுவான்.
மோருவின் கற்பனையில் ஒல்லி 1 தனிமையானது; 100 கொழுத்து வளமானது. 9 என்ற அழகி 1ன் அருகில் அமர்ந்து 19 ஆகும்போது மேலும் அழகாவாள்.
எண்கள் முடிவற்ற படிக்கட்டுகள் போல. அவன் அதில் சில நேரம் 1, சில நேரம் 2, அல்லது 3, அல்லது 4 என்று பந்தயம் போல் தாண்டுவான்.
சோர்வாக இருக்கும்போது படிக்கட்டின் கைப்பிடியில் சறுக்குவான்.
அரைவயிறு நிரம்பும்போதே காலியாகிவிடும் உணவு போலவோ, விளையாட்டு சூடு பிடிக்கும்போது வீட்டிற்கு ஓடிவிடும் நண்பர்கள் போலவோ அல்லாது, எண்கள் எப்போதும் கூடவே இருக்கும். முடிவற்ற எண்களை விருப்பம் போல் கூட்டவோ, கழிக்கவோ, இணைக்கவோ, வரிசைப்படுத்தவோ அல்லது கலைக்கவோ முடியும்.
மோருவின் நண்பர்கள் பலரும் பள்ளிக்குச் சென்றதால், அவனுக்கும் பள்ளி செல்வதில் விருப்பம் இருந்தது. காலையில் எழுந்து எங்காவது செல்வது அவனுக்குப் பிடித்திருந்தது. வகுப்பறையைவிட விளையாட்டு மைதானம் அவனை ஈர்த்தது.
அவனுக்கு ஆசிரியரைப் பிடிக்கவில்லை. பிள்ளைகள் கேள்வி கேட்க முடியாது, அங்கும் இங்கும் நகர முடியாது, ஏதாவது
சோல்ல விரும்பினாலும் சோல்ல முடியாது. இதனால் அவன் அடைப்பட்டது போல் உணர்ந்தான். மேலும், "ஆசிரியர் கோபக்காரர், அவருக்குப் பிள்ளைகளைப் பிடிக்காது" என்று மோரு நினைத்தான். அவருக்கே தான் ஆசிரியரானது பிடிக்குமா என்பது சந்தேகம்! எதுவானாலும், பிள்ளைகளுக்கு ஆசிரியரைப் பிடிக்கவில்லை.
தினமும் காலையில், ஆசிரியர் கரும்பலகையில் ஏதாவது எழுதுவார். உரத்த குரலில் அதை அவர்கள் ஸ்லேட்டில் பதிவு செயும்படி சோல்லிவிட்டு, வெளியே சென்று விடுவார். அவர்கள் நன்றாக எழுதியிருந்தால் அதைப் பார்ப்பார். அவர்கள் சரியாக எழுதாவிடில் கோபம் கொண்டு அவர்களைத் திட்டுவார்; அதிக கோபம் வந்தால் பலமாக அடிப்பார்.
ஒரு நாள் சில கணக்குகளை கரும்பலகையில் ஆசிரியர் எழுதினார். அந்த கணக்குகள் மோருவிற்கு எளிதாக இருந்ததால், அவன் விருப்பத்தைத் தூண்டவில்லை. மேலும் அவற்றைச் செய அவனிடம் ஸ்லேட்டும் இல்லை. உடைந்து போன ஸ்லேட்டுக்கு பதில் புது ஸ்லேட் வாங்க அவன் அம்மாவிடம் பணம் இல்லை.
ஆகவே அவன் சுவற்றில் ஏறும் நூற்றுக்கணக்கான எறும்புகளை எண்ணிக்கொண்டிருந்தான். வெளியே இருந்த மரத்தில் உள்ள இலைகள் மற்றும் அவற்றின் நிழல்கள் அவன் கவனத்தை ஈர்த்தன. பள்ளியின் சுற்றுசுவரில் இருந்த உடைந்த செங்கல்கள் எத்தனை என்று மனதில் எண்ணிப்பார்த்த அவன், அவற்றை மாற்றுவதானால் ஒன்று ஐந்து ரூபா வீதம் ஆயிரம் ரூபா தேவைப்படும் என்று கணக்குப் போட்டான்.
"மோரு, நீ ஏன் ஒன்றும் செயவில்லை, உன் ஸ்லேட் எங்கே?" என்று ஆசிரியர் கோபமாகக் கேட்டார்.
"எனது பழைய ஸ்லேட் உடைந்துவிட்டது; புதிது வாங்க பணமில்லை," என்றான் மோரு. ஆசிரியர் கோபத்தோடு அவன் கையில் கோலால் பளீர் என ஒரு அடி கொடுத்தார்.
"என்னிடம் ஸ்லேட் இருந்தாலும், அந்த கணக்கை நான் செய மாட்டேன்; எனக்கு செய இஷ்டமில்லை." என பதிலளித்தான் மோரு. மேலும் கோபம் அடைந்த ஆசிரியர் அவன் கன்னத்தில் ஒரு அறை
கொடுத்ததில் அவன் கன்னம் சிவந்தது. பொங்கி வந்த கண்ணீருடன் வெளியேறிய அவன், விளையாட்டு மைதானத்தைத் தாண்டி, உடைந்த கதவில் நுழைந்து வெளியே போவிட்டான்.
அடுத்த நாள் காலையில், மோருவின் தாயார் அவனை நேரத்தில் எழுப்பினாள். அவன் எழுந்திருக்கவில்லை; மாறாக கண்களை இழுத்து மூடிக்கொண்டான்.
பிறகு, ஒவ்வொரு நாளும் இதே கதைதான். எவரும் அவன் மனத்தை மாற்ற முடியவில்லை. வாரம், மாதம் என நாட்கள் பறந்தன. மோரு வீட்டின் எதிரே இருந்த சுவரில் வெகு நேரம் உட்கார்ந்திருப்பது வாடிக்கையாகிவிட்டது.
அல்லது மணிக்கணக்காக மார்க்கெட்டில் மறைந்து விடுவதும் வழக்கமாகிவிட்டது. சில நேரங்களில் அவன் பட்டம் விட முயல்வான், ஆனால் வேறு பட்டமே
இல்லாத வானம் அவனுக்கு களிப்பு ஊட்டவில்லை.
அவனது தாயாரின் கோபம், சகோதரனின் கேலி,
பாட்டியின் கெஞ்சல், மாமாவின் அன்பளிப்பு, நண்பர்களின் வேண்டுதல் போன்ற எதுவும் பலன் தரவில்லை. எவராலும் அவனை பள்ளிக்குத் திரும்ப அனுப்ப இயலவில்லை.
மழைக்காலம் வந்தது; கோடை விடுமுறை முடிந்து பள்ளியும் திறந்தது. எல்லோரும் மோரு மறுபடியும் பள்ளிக்குச் செல்வான் என்று எதிர்பார்த்தார்கள். மோரு ‘போகமுடியாது’ என்பதில் திடமாக இருந்தான். வருடம் ஒன்றும் கழிந்தது.
எல்லோரும் அவன் மீது இருந்த எதிர்பார்ப்பை, நம்பிக்கையை கைவிட்டுவிட்டார்கள். அவனுமே தன்னைக் கைவிட்டுவிட்டான். அவன்
மற்ற வேலைகளைச் செயத் தொடங்கினான்.
மார்க்கெட்டில் உள்ள காகறி வியாபாரிகளைத் தொந்தரவு செய ஆரம்பித்தான். தன்னைப் போல் பள்ளி செல்லாத குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டு பள்ளி செல்லும் குழந்தைகளை கேலி செது துன்புறுத்தினான்.
நண்பர்களின் நோட்டுப்புத்தகங்களில் இருந்து காகிதங்களைக் கிழித்து விமானம் செதான். மாடியில் ஏறி, கீழே போகும் மனிதர்கள் எதிர்பாராதபோது அவர்கள் மீது கவண் மூலம் கல் எறிந்தான்.
ஒரு நாள் பழைய ஆசிரியர் போப் புது ஆசிரியர் பொறுப்பு எற்றார். அன்று மோரு சுவரில் அமர்ந்து பள்ளி செல்லும் பிள்ளைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். எவரும் அவனை எதுவும் கேட்கவில்லை. தொல்லைக்குப் பயந்து எல்லோரும் அவனை விட்டு விலகிப் போனார்கள்.
ஆசிரியர் அவ்வழியே வந்தார். மோரு அவரை நோக்கினான்; அவரும் அவனை நோக்கினார். இருவரும் சிரிக்கவோ அல்லது முகம் சுளிக்கவோ இல்லை.
அடுத்த நாள் அதே நேரம், அதே இடத்தில் அமர்ந்து மோரு மேலிருந்து கீழே பார்த்தான். ஆசிரியரும் மேலே பார்த்து அவனை நோக்கி புன்முறுவல் பூத்தார். மோரு சுவரிலிருந்து குதித்து ஓடி மறைந்தான்.
சில நாட்களுக்குப் பிறகு, ஆசிரியர் அவ்வழியே நடந்து போனார். கையில் பெரிய கனமான பையுடன் இருந்த அவர் நடக்க சிரமப்பட்டார்.
சிறிது நேரம் தலையைச் சோறிந்த மோரு, மெல்ல நடந்த ஆசிரியரின் பின்னே ஓடினான். எதுவும் சோல்லாமல் அவரது பையின் ஒரு பக்கத்தைப் பிடித்துக்கொண்டான். சிரமம் குறைய, ஆசிரியரும் அவனுடன் சேர்ந்து பள்ளியை அடைந்தார்.
பின்னர் வகுப்பறையின் மேசை மீது அந்தப் பையை வைத்தனர். பையைத் திறந்த ஆசிரியர் மோருவை அதனுள் பார்க்க அனுமதித்தார். வண்ண வண்ண புத்தகங்கள் வெவ்வேறு வடிவிலும், அளவிலும் அதனுள்ளே இருந்தன; புதிய வாசனையுடன் மினுமினுத்தன.
"இவற்றை வெளியே எடுக்க நீ உதவுவாயா?" என்றார் ஆசிரியர்.
மோரு அவற்றை வெளியே எடுக்க ஆரம்பித்தான். அட்டையில் படங்களுடன் கூடிய கதைப் புத்தகங்கள், பெரிய எழுத்து புத்தகங்கள், மற்றும் அதிக இடமில்லாததால் நெருக்கி எழுதப்பட்ட புத்தகங்கள் என பல மாதிரியானவை அவை. இரண்டு வருடங்களாக புத்தகத்தையே தொடாத அவனுக்கு ஆசை எழத்தொடங்கியது.
அடுத்த நாள், பள்ளி முடிந்து பிள்ளைகள் போகும் வரை மோரு காத்திருந்தான். ஆசிரியர் தனியாக இருந்தார். சப்தமில்லாமல் உள்ளே சென்று கதவின் அருகில் நின்றான். நிசப்தமான பள்ளி பயத்தை கிளப்புவதாக இருந்தது.
அவனை நோக்கிய ஆசிரியர் "நீ வந்தது நல்லது; எனக்கு உன் உதவி தேவை." என்றார்.பல பிள்ளைகள் உதவ இருக்கையில், அவருக்கு என்ன விதமான உதவி தேவைப்படும் என மோரு ஆவலுடன் சிந்தித்தான்.
மிகவும் யதார்த்தமான குரலில் ஆசிரியர் கேட்டார்: "இந்தப் புத்தகங்களை வரிசைப்படுத்த உதவ முடியுமா?"
மோரு தரையில் புத்தகங்கள் சூழ அமர்ந்தான். பல்வேறு புத்தகங்களிலிருந்து விலங்குகளைப் பற்றிய புத்தகங்களைத் தனியாக அடுக்கினான்.
யானைகளும், ஒட்டகங்களும், வேங்கைகளும் ஒருபுறம், கடவுள்களும், தேவதைகளும் ஒருபுறம், வீரச்செயல்கள் ஒருபுறம் என தரம் பிரித்தான்.
அதன் பிறகு எண்கள் குறித்த புத்தகங்களைக் கண்ட போது அவன் வேகம் குறைந்தது. இளைத்த எண்கள், கொழுத்த எண்களுடன் நடனமாடின. இரட்டைப்படை எண்கள் ஒன்றின் மேல் ஒன்று அமர்ந்து ஆட்டம் கண்ட கட்டிடம் போல் காட்சி அளித்தன. பெருக்கல் கணக்குகள் குள்ளமாக தரையில் அமர்ந்து, எண்கள் பெருகப்பெருக மேலும் மேலும் கொழுத்தன.
வகுத்தல் கணக்குகள் அதற்கு நேர்மாறாயிருந்தன. அவை குறைந்து குறைந்து வால் போல் மெலிந்து, இறுதியில் சிலநேரம் காணாமல் போயின. ஒவ்வொன்றாக எல்லாம் அவனுக்கு ஞாபகம் வந்தது.
அப்போது இருட்ட ஆரம்பித்தது, மேலும் பள்ளியில் விளக்கும் இல்லை. "நீ இப்போது வீட்டிற்க்கு போகலாம், மோரு, ஆனால் நாளை திரும்பி வரவேண்டும். ஆனால் பிள்ளைகள் இருக்கும்போது வருவாயா?" என்றார் ஆசிரியர். அடுத்த நாள், பள்ளி ஆரம்பித்தவுடன் மோரு வந்துவிட்டான். அவனைக் கண்டு ஆச்சரியமுற்ற பிள்ளைகள், சிறிது பயப்படவும் செதனர்.
ஏனெனில் மோரு அந்தப் பகுதியில் பெரிய ‘தாதா’ என்று பெயரெடுத்து இருந்தான். "எனக்கு உதவ இப்போது ஒருவர் இருக்கிறார்," என்றார் ஆசிரியர். மோருவை சிறிய பிள்ளைகளுடன் அமர வைத்தார். அவர்கள், தங்களிடமிருந்த புத்தகத்தில் எழுத வேண்டுமாயிருந்தது.
"இந்தப் பிள்ளைகள், கொடுத்துள்ள எண்களை மேலிருந்து கீழாக இறங்கு வரிசையிலும், கீழிருந்து மேலாக ஏறு வரிசையிலும் எழுத உதவி செய முடியுமா?"
சின்ன பிள்ளைகள் அவனைச் சூழ்ந்து கொண்டனர். முரடன் மோருவிற்கு இவ்வளவு தெரியுமா என அவர்கள் வியந்தனர்.
மோரு அவர்களை உயரப்படி ஒரு வரிசையில் நிறுத்தினான். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு எண்ணைக் கொடுத்து பிடித்துக்கொள்ளச் சோன்னான். இப்போது எல்லாம் மிகவும் எளிதானது. எண்களுக்கும், பிள்ளைகளைப் போல குறிப்பிட்ட இடம் இருந்தது!
ஒவ்வொரு நாளும், மோரு சிறிது நேரம் பள்ளிக்கு வந்தான். ஆசிரியரும் அவனுக்கு கொஞ்சம் கொஞ்சம் பெரிய வேலை கொடுத்தார். எண்களின் மேல் அவனுக்கிருந்த ஈடுபாடு அதிகமானது; அவனுடைய ஆர்வமும், திறமையும் அந்த சிறிய பிள்ளைகளைப் பற்றிக்கொண்டது.
ஒருமாதம் கழிந்து ஒருநாள் காலை அவனது தாயார் அவனைத் தேடினார். சுவற்றிலோ, மாடியிலோ, மாமரத்திலோ எங்குமே மோருவைக் காணவில்லை.
அவர் மார்க்கெட்டுக்கு போ தேடியபோது அங்கு வியாபாரிகள் எந்த தொந்தரவும் இல்லாமல் வியாபாரம் செது கொண்டிருந்தார்கள்.
கடைசியாக அவர் மேலும் நடந்து பள்ளியின் ஜன்னல் வழியாக உள்ளே நோக்கினார்.
மோரு அங்கே இருந்தான். அவன் குனிந்து தனது புத்தகத்தை கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். மிகவும் ஈடுபாட்டுடன், தீவிரமாக, சிந்தனை கோடுகள் முகத்தில் தெரிய, மற்ற பிள்ளைகளுடன் அவன் கணக்கு போட்டுக்கொண்டிருந்தான்.
வெளியே நோக்கிய ஆசிரியர், மோருவின் தாயாரைக் கண்டு இதமான புன்னகை புரிந்தார். தாயாரும் மகிழ்ச்சியுடன் புன்னகைத்தார். மோரு மறுபடியும் பள்ளிக்கு வந்துவிட்டான்.
அவன் மேலும் மேலும் படிப்பதோடு
மட்டும் அல்லாமல் அதில் அதிக விருப்பமும் காட்டினான்.