mudall veedu

முதல் வீடு

முன்னொரு காலத்தில் மக்கள் குகைகளில் வசித்தபோது, அருணாச்சலப் பிரதேசம் என்று இப்பொழுது அழைக்கப்படும் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் இரு சகோதரர்கள் சொந்தமாக வீடு கட்டிக்கொள்ள முடிவு செய்தார்கள். அந்த பகுதியில் வசித்த விதவிதமான பிராணிகளைப்பற்றி பேசும் இந்த கிராமியக்கதை முதல் வீடு கட்டப்பட்டது எப்படி என்று நமக்கு சொல்கிறது.

- S. Jayaraman

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

காட்டின் தரையில் திடீரென்று ஒரு பாம்பு ஊர்ந்து வந்து, “என்னைப்போல் நீளமாகவும் மெலிதாகவும் உள்ள கம்புகளை சேகரியுங்கள்” என்றது. எனவே அருகில் இருந்த மூங்கில் புதர்களை நோக்கி கின்ட்ரு- லலிம் மற்றும் லாலி-தாம் கம்புகளை வெட்டுவதற்கு சென்றார்கள்.

வெட்டிய மூங்கில்கம்புகளை முதுகில் சுமந்தவாறு அவர்கள் திரும்பி வந்தபோது, "மூவ்..." என்று ஒரு சோகமான குரல் கேட்டது. அந்த காட்டில் வாழும் பெரிய கால்நடையினத்தைச் சேர்ந்த மிதுன், இறந்த ஒரு மிருகத்தின் உடலின் பக்கமாக நின்றிருந்தது.

“வீடு கட்டுவது எப்படி என்று தயவுசெய்து சொல்லுங்கள்” என்றான் லாலிதாம். “நான் இப்பொழுது மிகவும் சோகமாக இருக்கிறேன். ஆனாலும் உங்களுக்கு உதவுகிறேன்” என்று சொன்ன மிதுன், “ஒரு புலி என் கணவனை கொன்றுவிட்டது."

"அவரின் எலும்புக்கூட்டில் உள்ள எலும்புகள்போல கம்புகளை குறுக்கும் நெடுக்கும் வைத்து கூரையை அமைத்திடுங்கள்.” என்று சொல்லி இறந்த கணவனின் உடலை சுட்டிக்காட்டியது மிதுன். கின்ட்ரு- லலிம் மற்றும் லாலி-தாம்  அறிவுரைக்கு நன்றி சொல்லிவிட்டு மூங்கில் கம்புகளை குறுக்கும் நெடுக்குமாக கட்டினார்கள். விரைவில் களைத்துப்போனார்கள்.

எனவே மூங்கில் கம்புகளை கீழே வைத்துவிட்டு தண்ணீர் குடிக்க அருகிலிருந்த நதிக்கு சென்றார்கள். திடீரென ஒரு மீன் ஒயிலாக நீந்தி அவர்களிடம் வந்து, “நீங்கள் வீடுகட்டுவது எனக்கு தெரிந்தது. என் முதுகில் உள்ள செதில்களைப் பாருங்கள்" என்றது

"நிறைய இலைகளை சேகரித்து, அவைகளை கூரையின்மேல் செதில்கள்போல பரப்புங்கள். அவை மழை மற்றும் வெயிலிலிருந்து உங்கள் வீட்டை காக்கும்” என்று சொல்லி மீன் மெதுவாக நீந்தி சென்றது.

கின்ட்ரு- லலிம் மற்றும் லாலி-தாமுக்கு வீடு கட்ட தேவையான எல்லா ஆலோசனைகளும் கிடைத்துவிட்டன. மிக கடினமாக உழைத்து அவர்கள் வீட்டை கட்டி முடித்தார்கள்.

அவர்கள் வீட்டை கட்டி முடித்த பின், காட்டில் வசிக்கும் எல்லா ஜீவராசிகளையும் வீட்டைப் பார்க்க அழைத்தார்கள். அவை அனைத்தும், “அழகான வீட்டை நீங்கள் கட்டியிருக்கிறீர்கள்! இது உங்கள் வீடு. இதில் மகிழ்ச்சியாக வாழுங்கள்!” என்றன.

“இது எங்கள் வீடு மட்டுமல்ல. உங்கள் வீடும்தான். நீங்கள் உதவியதால்தான் கட்ட முடிந்தது” என்று கின்ட்ரு-லலிம் மற்றும் லாலி-தாம் மகிழ்ச்சியுடன் சொன்னார்கள். சூரியன் வானத்தில் பிரகாசித்தது. காற்று மெதுவாக ஒலி எழுப்பியபடி மரங்களை அசைத்தது. கின்ட்ரு- லலிம் மற்றும் லாலி-தாம் அவர்களின் புதிய வீட்டிற்குள் நுழைந்தார்கள்.