என்னால் நூல் பின்ன முடியாது. மீன்களால் கண் சிமிட்ட முடியாது...
... பன்றிகளால் பறக்க முடியாது!
நாய்களால் ஆட முடியாது, காகங்களால் பாட முடியாது, எறும்புகளால் படிக்க முடியாது...
... குரங்குகளால் சமைக்க முடியாது!
ஆனால், குரங்குகளால் தாவ முடியும்!
காகங்களால் கரைய முடியும்... நாய்களால் குறைக்க முடியும்... எறும்புகளால் கடிக்க முடியும்!
பன்றிகளால் சாப்பிட முடியும், மீன்களால் நீந்த முடியும்,
பூனைகளால் குதிக்க முடியும், அது மட்டுமா...? என்னால் படிக்க முடியும்!