உண்ணியின் அம்மும்மாவுக்கு நல்ல சளி.
அவர் தன்னுடைய மிருதுவான பழைய முண்டில் மூக்கு சிந்தினார்.
“ஆச்ச்ச்ச்ச்ச்சூ!”
அம்மும்மாவிடம் நிறைய பழைய முண்டுகள் இருந்தன. அவருடைய பூனை பிஸ்கோவைவிட வயதான முண்டுகள். உண்ணியைவிட வயதான முண்டுகள் கூட இருந்தன!
சொல்லப் போனால், அவர் வீட்டுப் புழக்கடையில் நின்றிருந்த மாமரத்தைவிட வயதான முண்டுகளும் இருந்தன.
ஆரஞ்சு நிறக் கோடுகள் கொண்டிருந்த முண்டுகள்தான் உண்ணிக்கு ரொம்பப் பிடிக்கும். காலையில் உதிக்கும் சூரியனின் ஆரஞ்சு நிறம்.
“இது பழைய முண்டுதான் உண்ணி.நீயே வைத்துக்கொள்.”
அம்மும்மா எப்போதுமே பழையதில் இருந்து புதிதாய் எதையாவது செய்து விடுவார்!
அப்படியே மாயமந்திரம் போல!
ஜிங்கிலி-மங்கிலி-பங்கிலி-பூஊஊ! குட்டி ரேணுவுக்கு தொட்டிலும் கீழாடைகளும் தயார்! இரவுகளை வெளிச்சமாக்க விளக்குத் திரிகளும் கூட.
ஜிங்கிலி-மங்கிலி-பங்கிலி-பூஊஊ!
ஊறுகாய் ஜாடிகளுக்கு மூடிகளும் தயார். சூ, ஈயே, தூரப் போ!
ருசியாக குழம்பு வைக்க மசாலாப் பொருட்களைக் கட்டிப் போடும் பைகள்.
அக்கட-பக்கட-சக்கட-பம்பா!
பின்னல் சடை, பறக்கும் அங்கி, புது உடுப்பு! இங்கே பாருங்கள்!
அக்கட-பக்கட-சக்கட-பம்பா!
நான் குதிப்பேன், ஊஞ்சலாடுவேன், மரத்திலும் ஏறுவேன்!
“ஆச்ச்ச்ச்ச்சூ!”
அக்கட-பக்கட-சக்கட-பம்பா!
“அம்மும்மா, உங்களுக்கு கைக்குட்டைகள் கொண்டுவந்திருக்கிறேன், பாருங்கள்!”