அம்மா இந்த வாரம் முட்டைகோஸ் அறுவடை செய்திருந்தார். டூபீ, மாயா, டஸ்கி மூவரும் சனிக்கிழமைகளில்
காய்கறித் தோட்டத்தில் உதவுவது வழக்கம். இன்று குழந்தைகள் முட்டைகோஸ்களை எண்ணி, பெட்டிகளில் அடுக்கித் தரப் போகிறார்கள். அப்பா அவற்றை சந்தையில் விற்று வருவார்.
குழந்தைகள் மூவரும் தோட்டத்திற்கு வந்தார்கள். அப்பாவின் டிரக்கிற்கு அருகே முட்டைகோஸ்கள் குவித்து வைக்கப் பட்டிருத்தன. "அம்மாடி! எவ்வளவு முட்டைகோஸ்கள்" சுட்டிக் காட்டி சொன்னாள் மாயா. "கண்டிப்பா ஆயிரம் இருக்கும்" என்றான் டஸ்கி. "இல்லேவே இல்லை! இருநூறு இருக்கலாம்" என்றாள் டூபீ.
அம்மா கேட்டுக்கு அருகே காத்திருந்தார். "குழந்தைகளே, அடுக்க ஆரம்பிக்கலாமா.
நீங்க ஒவ்வொரு பெட்டியிலும் 12
முட்டைகோஸ்களை அடுக்கணும். இது போல 20 பெட்டிகளை அடுக்கணும். உங்களில் ரெண்டு பேர் ஆளுக்கு 7 பெட்டிகளை அடுக்கலாம். மிச்சமிருக்கும் 6 பெட்டிகளை மூன்றாவது நபர் அடுக்கலாம்."
மூவரும் முட்டைகோஸ்களை சுற்றி நின்று கொண்டு எப்படி அடுக்குவது என்று ஆலோசித்தார்கள். "நான் இரண்டு இரண்டாக அடுக்கப் போகிறேன்" என்றாள் மாயா. டஸ்கி "நான் நான்கு நான்காக" என்றான். " நான் மூன்று மூன்றாக எண்ணி அடுக்குறேன்!" என்றாள் டூபீ.
விரைவில் மூவரும் 20 பெட்டிகளையும் அடுக்கி முடித்தனர். "தங்கப் பிள்ளைகள். சீக்கிரமாவே வேலையை முடிச்சுட்டிங்களே" பாராட்டினார் அம்மா. "கீழே சிதறி கிடக்கும் இலைகளை பன்றிகளுக்கு இரையா போடலாம்" என்று யோசனை சொன்னார்.
அடுத்து விலையினை பெட்டியில் எழுதி டிரக்கில்
அடுக்கினார்கள். அப்படி அடுக்கும்போது பெட்டியின் எடை எல்லா பக்கமும் சமமாக இருக்கும்படி அடுக்கினார்கள்.
"நாம் முடித்துவிட்டோம்" என்றார் அப்பா. "எடையை சமமாக்க இன்னும் எத்தனை பெட்டிகளை அடுக்க வேண்டும்?"
"ஐந்தைந்து பெட்டிகளா இரண்டு வரிசைகளில் அடுக்குறோம் அப்பா" என்றனர்.
20 பெட்டிகளையும் அடுக்கியதும் அப்பா சந்தைக்குக் கிளம்பினார். "எல்லா பெட்டிகளையும் விற்று விட்டால் பன்றிகளின் தொழுவத்தைப் பழுது பார்க்க போதுமான பணம் கிடைத்துவிடும். அதுமட்டுமில்லாது குழந்தைகளுக்கும் பரிசுகள் வாங்கி வருவேன்!"
தோட்டத்தில் குழந்தைகள் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினர். களைகளை அகற்றினர். மணி பன்னிரெண்டு ஆனதும் அனைவரும் சோர்வாக உணர்ந்தனர். அம்மா குழந்தைகளிடம் "இன்று உங்களுக்கு பிடிச்சது சாப்பிடத் தரப்போறேன். என்னன்னு சொல்லுங்க பாக்கலாம்!" என்றார்.
குழந்தைகள் மூவரும் என்னவாக இருக்கும் என்று பேசிக் கொண்டனர். இருந்தும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அம்மா அவரது உடையில் மறைத்து அந்த உணவை ரகசியமாக எடுத்து வந்தார்.
"நீங்க நினைச்சது இதுவான்னு சரி பாத்துகோங்க" என்றபடி பாக்கெட்டில் இருந்து ஆப்பிள் பழங்களை எடுத்துக் கொட்டினார். "யேய்! நா சொன்னதுதான் சரி" கீச்சு குரலில் கத்தினான் டஸ்கி. அம்மா மூவரிடமும் "மூவரும் சரி சமமாகப் பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று நினைவு படுத்தினார்.
குழந்தைகள் ஆப்பிள்களை இரண்டு இரண்டாக எண்ணினர் . 2,4,6,8,10,12,14,16. எண்ணி முடித்ததும் ஒரு ஆப்பிள் மீதமிருந்தது. ஏனென்றால் மொத்தமாக 17 ஆப்பிள்கள் இருந்தன.
அடுத்து மூவரும் ஆளுக்கு ஐந்து ஆப்பிள்களைப் பிரித்துக் கொண்டனர். அப்போது இரண்டு ஆப்பிள்கள் மீதமிருந்தன.
"இந்த இரண்டு ஆப்பிள்களை வெட்டி சமமாக எடுத்துக்கொள்வோம்", என்றான் டஸ்கி. "ஒவ்வொருவருக்கும் எத்தனை துண்டுகள் கிடைக்கும்", என்றாள் மாயா. "எனக்கு விடை தெரியும்" புன்னகைத்தாள் டூபீ.
"இந்தப் பழங்கள் அம்மா அப்பாவுக்கு"
அப்பா சந்தையிலிருந்து திரும்பி வந்தார். டிரக் காலியாக இருந்தது. " முட்டைகோஸ்கள் அனைத்தயும் விற்றுவிட்டேன். இந்தப் பணத்தைக் கொண்டு நமது பன்றிகளின் தொழுவத்தை சரி செய்து விடலாம். அது மட்டுமில்லாமல் நீங்கள் விளையாடக் கேட்ட சாக்கர் பாலும் வாங்கலாம்" என்றார். "யே..ய்!" என்று குழந்தைகள் மூவரும் மகிழ்ச்சியாய் கூச்சலிட்டனர்.