கலா என்ற ஒரு பெண் இருந்தாள். அவள் விளையாட்டு மற்றும் படிப்பில் சிறந்து விளங்கினாள். ஒருமுறை தன் நண்பர்களுடன் விளையாடினாள்.அப்பொழுது தன் நண்பர்களிடம் இன்று என் தினம் ஆகையால் உங்களுடன் இருப்பேன் என்றாள்.
பிறகு ஒரு முறை தன் நண்பர்களுடன் பொருட்காட்சிக்கு சென்றாள்.. அங்கே தன் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக காணப்பட்டாள். அன்றைய தினம் அவளுடையதாகவே இருந்தது.
அவள் சிறந்த படங்களை வரைவதில் ஆர்வமாக இருப்பாள். அப்படங்களை கண்டு சிறந்த ஓவியர்களுக்கான பரிசையும் வென்றாள். அவளுடைய படங்களை வெளிநாட்டில் உள்ளவர்கள் வாங்கி மகிழ்ந்தனர்.
அவள் பறவைகள் மற்றும் விலங்குகளுடன் இசை அமைப்பதில் வல்லவள். ஒரு முறை அந்த இசையில் பறவைகளும் ஆர்வமாக செயல்பட்டன. அன்றைப தினம் அவளுடையதாகவே இருந்தது.