naalai paarkalaam

நாளை பார்க்கலாம்

"நாளை பார்க்கலாம்!" என்று பேச்சுக்குச் சொன்னாலும் நிஜமாகவே அவர்களை அடுத்த நாள் பார்ப்போமா? இந்தப் பையனின் நண்பர்கள் அவன் சொன்னதை உண்மையாக்கி விடுகிறார்கள்!

- Gomathi Shankar

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

"போயிட்டு வரேன், நாளை பார்க்கலாம், தவளையே."

"நாளை பார்க்கலாம், புள்ளி மானே."

"நாளை பார்க்கலாம், குரங்கே."

"நாளை பார்க்கலாம், செம்மறி ஆடே."

" நாளை பார்க்கலாம், மயிலே."

"நாளை பார்க்கலாம், பசு மாடே."

"நாளை பார்க்கலாம், எருமையே."

"நாளை பார்க்கலாம், யானையே."

"யார் அங்கே?"

"என் நண்பர்கள் தான்."

"அவங்களை சாப்பிட வரச் சொல்லு."

"நான் இப்போ பள்ளிக்கூடம் போகணும். நாம .... அப்புறம் பார்க்கலாம்!"