naan thenin niram

நான் தேனின் நிறம்

அவர் உன்னுடைய ஆசிரியரா? அவர் உன்னுடைய அத்தையா? அமண்டா இந்த கேள்விகளை கேட்டு சோர்ந்துவிட்டாள். ஆனால் அவள் ஆச்சரியப்படும் அளவு அவர்களை போல பல விதங்களில் இருப்பதை உணர்கிறாள்!

- Kalpana T A

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

என் பெயர் அமண்டா. எங்கள் வீட்டில் அம்மா, அப்பா மற்றும் என் நாய் போர்‌சா இருக்கிறோம்.

என் அப்பா நான் தேனின் நிறம் என்கிறார்.

என் அம்மா  நான், சூரியன் மறையும் அழகிய மாலை பொழுது என்கிறார்.

ஆனால் நான் இருவரை போலவும் இல்லை.  போர்‌சா மட்டும் தான் என்னை போல பழுப்பு நிறம்!

நாங்கள் வெளியே செல்லும் போது சிலர் எங்களை கண் அசைக்காமல் பார்ப்பது உண்டு, இல்லை என்றால் எங்களிடம் நிறைய கேள்வி கேட்பதும் உண்டு.

"அவர் உன் அத்தையா?" அந்த கடையில் இருக்கும் பெண் கேட்டார்.

"இல்லை! அவர் என் அம்மா!"

"அவர் உன் ஆசிரியரா?" அந்த பூங்காவில் இருக்கும் ஆண் கேட்டார்.

"இல்லை!அவர் என் அப்பா!"

"நீ ஏன் பார்ப்பதற்கு அவர்களை போ

ல இல்லை?"

"ஏன் என்றால் நான் தேனின் நிறம். மற்றும் நான்  சூரியன் மறையும் அழகிய மாலை

பொழுது போல இருக்கிறேன்."

"ஆனால் உன் அப்பா  இரவு வானம் போல இருக்கிறார்" என்று அந்த கடையில் இருக்கும் பெண் கூறினார். "மற்றும் உன் அம்மா புத்தகத்தில் இருக்கும் வெந்நிற வெற்று காகிதம் போல இருக்கிறார்," என்று அந்த பூங்காவில் இருந்த ஆண் கூறினார்.

"நீ  ஏன் பார்ப்பதற்கு வேறு யாரோ ஒருவர் மாதிரி இருக்கிறாய்?

அடுத்த நாள், என் அம்மாவை போல என் தலையைச் சுற்றி துண்டைக்கட்டிக் கொண்டேன். "அவர் உன் அத்தையா?" என்று கடையில் இருக்கும் பெண் கேட்டார். "இல்லை, அவர் என் அம்மா!"

நான் வீட்டிற்கு ஓடினேன், கருப்பு சாயம் எடுத்துக் கொண்டேன். என் முகத்தில் பூசிக்கொண்டேன்.

"நல்ல முக ஓவியம்!" என்றார் பூங்காவில் இருந்த ஆண். அவர் என் அப்பாவைக் காட்டி, என்னை கேட்டார், "அவர் உன்னுடைய ஆசிரியரா?"

"இல்லை, அவர் என்னுடைய அப்பா!"

என்னுடைய கண்ணீர் துளிகள், முக சாயத்தை கழுவியது.

"அம்மா, அப்பா, நான்  ஏன் உங்களை போல பார்ப்பதற்கு இல்லை?"

" அமண்டா, உனது அப்பாவை போலஅந்த அழகிய புன்னகையை காட்டு."

எனக்கு புன்னகைக்க தோணவில்லை.

"இங்கே வா அமண்ட,  கன்னக்குழியை பார். உனது அம்மாவை போல நேர்த்தியாக இருக்கும்!"

அம்மாவும் அப்பாவும் என்னை சிரிக்க வைத்தார்கள். நானும் அவர்களை சிரிக்க வைத்தேன்!

"பாரு!" என்றேன், "என்னுடைய வெள்ளை பற்கள் உங்களுடையது போலவே இருக்கு."

"ஆமாம், உனது சிவப்பு இதயமும் எங்களுடையது போலவே இருக்கு."

நீங்கள் எத்தனை வண்ணங்கள்?