நீல நாக்கு
கரு நாக்கு
நீள நாக்கு
வீர நாக்கு
முள் நாக்கு
பசை நாக்கு
சொரசொர நாக்கு
வழுவழு நாக்கு
கவை நாக்கு
வேகமான நாக்கு
கனமான நாக்கு
முடியுள்ள நாக்கு
உன்னுடைய நாக்கு எப்படி இருக்கிறது?
நாக்கைப் பற்றிப் பேசுவோம் வாருங்கள்.
நாக்கு தசைகளால் ஆனது என்பதும் அது பல வகையான வேலைகளைச் செய்யும் என்பதும் உங்களுக்குத் தெரியுமா? ஆனாலும் அது சோர்வோ, தளர்வோ அடைவது இல்லை.
பனிக்கரடியின் நீல நிற நாக்கு சூரிய வெப்பத்தை உள்ளிழுத்துக் கொண்டு அதன் உடலைச் சூடாக வைக்கிறது.
ஒட்டகச்சிவிங்கியின் கரு நிற நாக்கு, ஆப்பிரிக்காவில் உள்ள சவானா காட்டில், வெயிலினால் ஏற்படும் தோல் எரிவிலிருந்து பாதுகாக்கிறது.
அலுங்கு தன் நீளமான நாக்கை எறும்புப் புற்றுக்குள் விட்டு தனக்கு விருப்பமான உணவான எறும்புகளை சுவைத்து உண்ணுகிறது.
சாலமாண்டர் தன் சக்தி வாய்ந்த நாக்கினால் சிள்வண்டுகளையும், பழ ஈக்களையும் பிடித்து இழுத்துத் தின்கிறது.
வாத்து தன் நாக்கின் விளிம்பு முழுதும் உள்ள நுண்ணிய முள் போன்ற அமைப்புகளைக் கொண்டு புற்களை கட்டியாகப் பிடித்து, கிழித்தெடுத்து மென்று தின்கிறது.
தவளை தன் நீளும் தன்மை கொண்ட நாக்கையும், பசை போன்ற எச்சிலையும் கொண்டு ஈக்களை பிடித்துத் தின்கிறது.
பூனை தன் சொரசொரப்பான நாக்கினால் தன் ரோமத்தை வாரிவிட்டுக் கொள்ளும்.
நாய் அதிக சூட்டினால் வீங்கிய தன் நாக்கை, வாயின் வெளியே தொங்க விட்டு குளிர வைக்கும்.
பாம்பு தன் கவை நாக்கினால் சுற்றுப்புறத்தின் வாசனையைக் கண்டுபிடிக்கும்.
பச்சோந்தி மின்னல் வேகத்தில் நாக்கை வெளியே நீட்டி, வெட்டுக்கிளி தத்தி ஓடுவதற்குள் பிடித்து உள்ளே இழுத்துக்கொள்ளும்.
பூமியிலேயே மிக பெரிய விலங்கான நீலத்திமிங்கலம், மிகக் கனமான நாக்கைக் கொண்டது. அந்த நாக்கினால் அதற்கு மிகவும் பிடித்த சின்னஞ்சிறு கூனிப்பொடிகளையும் பிடித்துவிடும்.
செந்நாரையின் நுண் காம்புகள் மிகுந்த நாக்கு, அதற்கு மிகவும் விருப்பமான நீலப்பச்சை பாசிகளையும் கூனி இறால்களையும் வடிகட்டும்.