ஆற்றின் கரையேறம் முதலையும் குரங்கும் ஒன்றாக வசித்து வந்தன. இருவரும் நல்ல நண்பர்கள்.
ஒரு நாள் குரங்கு முதலையிடம் சொன்னது: "நண்பா! எனக்கு இந்த ஆற்றை சுற்றி பார்க்க ஆசையாக உள்ளது"
உடனே முதலை சொன்னது: "நான் உன்னை கூட்டி கொண்டு செல்கிறேன்".
பின்னர், முதலை தன் முதுகில் குரங்கை உட்கார வைத்து ஆற்றை சுற்றி காட்டியது. குரங்கும் மகிழ்ச்சியோடு ஆற்றை சுற்றி பார்த்தது.