nanbanai kaanavillai

நண்பனை காணவில்லை

காணமல் போன நண்பனைத் தேடும் காவலனின் பயணக் கதை !!!

- Thamizhini Senthilkumar

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

மிருகக்காட்சி சாலையின் பாதுகாவலன் வேலனுக்கு  அன்றைய பொழுது அதிர்ச்சியுடன் ஆரம்பமானது.

"நம் நண்பன் ஒருவனைக்  காணவில்லையே!  கண்டாயா கரடி நண்பா ?" என்று கேட்டான் வேலன்.

"காட்டுக்குள் தேடிப்பார் கண்டவர்கள் சொல்வார்கள்" என்றது கரடி .

அவன் காடு முழுவதும் காணமல் போன நண்பனை  தேடினான் .

"குளக்கரையில் இருக்கும்

கொக்கிற்கு   தெரியும் ..

அவனிடம் கேள் !!" என்றே  அழகாய் பாடின ஆந்தையும்  தவளையும்.

"என் நண்பனைப் பார்த்தாயா ?" என்று கொக்கிடம் கேட்டான்.

"ஆற்றுக்குள் இருக்கும்

ஆமையிடம் சென்று அன்பாக கேள்..

அவன் சொல்வான் ஒரு வழியை !!" என்றது கொக்கு .

"தரை மேல் இருக்கும் என் தம்பி

குரைத்தே  சொல்வான் ஒரு வழியை!!".

அரை தூக்கத்தில் இருந்த  ஆமை சொல்லிச்சென்றது

நாய்க்குட்டியிடம் சென்று  "என் நண்பனைப் பார்த்தாயா ? " என்று கேட்டான் .

"எப்படி இருப்பான் உன் நண்பன்?" என்று கேட்டது நாய்க்குட்டி.

பழுப்பு நிறத்தில் இருப்பான்

பழம் நிறைய உண்பான்!!" என்றான் வேலன்.

" எனக்குத்  தெரியும் , என்னுடன் வா !!" என்றது நாய்க்குட்டி .

வாசல் கதவைத்  திறந்ததும்

வாயில் பழத்துடன் இருந்த

நண்பனை கண்டான் வேலன்.  மகிழ்ச்சியுடன் நாய் குட்டிக்கு நன்றி சொன்னான் .