என் பெயர் யாழினி. நான் தினமும் இயற்கை உணவு சாப்பிடுகிறேன்.
தினமும் காலையில் நான் ஒரு கிளாஸ் தேங்காய் பால் குடிக்கிறேன்.
தினமும் என் உணவில் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவேன்
என் மதிய உணவு வெள்ளரி துண்டுகள், ஆரஞ்சு, திராட்சை, சிறிய கேரட் துண்டுகள் மற்றும் பிற பழங்கள்.
என் மாலை தின்பண்டங்கள்
வேர்க்கடலை, உலர்ந்த பழங்கள்,உடைத்த கடலை,வேகவைத்த
ஆள்வெளி கிழங்கு மற்றும் சோளம்.
இரவு உணவிற்கு நான் அவலுடன் தேங்காய் பூ மற்றும் பனை சர்க்கரை சேர்த்துச் சாப்பிடுவேன்.
நான் பாதம், பிஸ்தா, வால்நட், பூசணி விதைகள்,முந்திரி மற்றும் பிற வறுத்த கொட்டைகளையும் சாப்பிடுவேன்.
இயற்கை உணவு உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. எனவே தயவுசெய்து உங்கள் உணவில் இயற்கை உணவை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கவும்.