neema indru enna saapidukiraal

நீமா இன்று என்ன சாப்பிடுகிறாள்?

சாப்பிடுவதை நேசிக்கும் நீமாவைச் சந்தியுங்கள். வழுக்கும் லிச்சிபழம், அமுக்கினால் பிதுங்கும் பழுத்த நாவற்பழம், புளிப்பான புளியங்காய், பச்சைப் பசேல் கீரை எல்லாமே நீமாவுக்குப் பிடித்தமானவை. ஆண்டு முழுவதும் நீமா என்னவெல்லாம் மென்று கடித்து தின்கிறாள் என்று பாருங்கள்!

- Praba Ram,Sheela Preuitt

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

நீமாவைச் சந்தியுங்கள்!உங்களைப் போலவே, அவளும் உணவை நேசிக்கிறாள்.அதனால்தான்,நீமா எப்பொழுதும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறாள்.

கடித்து கடித்து,

மென்று மென்று,ம்ம்ம்... ம்ம்ம்! அடடா! மெல்லும்போது வாயை

மூடிக்கொள், நீமா!

கோடைக்காலத்தில் ஒவ்வொரு நாளும் நீண்டதாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும்.

வெளியே சூடாக இருக்கிறது.

மஞ்சள், பச்சை, மற்றும் சிவப்பு நிறங்களில் மாம்பழம் சாப்பிட ஏற்றது கோடைக்காலம். பளீர் சிவப்புத் தோலோடு வழுவழுப்பான வெள்ளை விளச்சிப்பழம்,

பச்சையும் வெண்ணெய் மஞ்சளுமாய், கோடுகளோடு தர்பூசணிகள்,

வாயில் சுவை நிரப்பும் சாறு நிறைந்த முசுக்கட்டைப்பழம்,

ஆஹா! நீமாவின் கைகள் இப்பொழுது பிசுபிசுவென்று

ஊதா நிறமாகி விட்டதே!

பருவமழைக் காலத்தில்

கருமையான கிடுகிடுக்கும் மேகங்கள் திரண்டு வந்து

வெளியே மழை பெய்கிறது.

நீமா இன்று என்ன சாப்பிடுகிறாள்?

பருவ மழைக்காலம் சோளம் சாப்பிட ஏற்றது  - மஞ்சள்,

வெள்ளை மற்றும் ஊதா நிறச் சோளம்.

புதிய, சாறுமிகுந்த சாத்துக்குடி பழங்கள்,

தலையில் கிரீடம் அணிந்திருக்கும் அன்னாசி,

கரும் ஊதா நிற பழுத்த நாவற்பழம்,

அடடா! நீமாவின் நாக்கு மரத்து, நீல நிறம் ஆகி விட்டதே!

குளிர் காலத்தில்,

பகல்வேளை குறுகி விடும்.

வெளியே குளிர் நடுக்குகிறது.

நீமா இன்று என்ன சாப்பிடுகிறாள்?

குளிர்காலம்தான் சிவப்பு பச்சை நிறங்களில் கீரை சாப்பிடும் காலம்.

அஸ்தமிக்கும் சூரியன் போல சிவப்பான பீட்ரூட்,

பச்சை நிறத்தில் பருத்த சீத்தாப்பழம்,

நீமா மரத்தில் ஏறி விட்டாள்.

அடடா! புளிப்பான, பழுப்புப் புளியங்காய்களை எல்லாம்

பறித்துவிட்டாளே!

நீமாவிற்கு சாப்பிடப் பிடிக்கும். ஆனால்

அவளுக்கு பருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடப் பிடிக்கும்!

கடித்து கடித்து,

மென்று மென்று,

ம்ம்ம்... ம்ம்ம்!

உலகத்தில் பொதுவாக, ஐந்து வகையான பருவங்கள் உள்ளன - இளவேனில் காலம், கோடைக்காலம், மழைக்காலம், இலையுதிர் காலம் மற்றும் குளிர்காலம். ஆனால், நீமா வசிக்கும் இடத்தைப் போன்ற இந்தியாவின் சில பகுதிகளில் கோடை, மழை, மற்றும் குளிர் காலங்கள் மட்டுமே உள்ளன.

பருவகாலத்திற்கு ஏற்ப சாப்பிடுங்கள்!

நீமாவைப் போல், ஆண்டு முழுவதும் வண்ணமயமான மற்றும் சுவையான பழங்கள்  மற்றும் காய்கறிகளை நீங்கள் சாப்பிட முடியும். இந்த பருவ கால அட்டவணையைக் கொண்டு, வருடம் முழுவதும் எந்த பழங்கள் மற்றும் காய்கறிகளைச்  சாப்பிடலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

புளியங்காய்: ஜனவரி-பிப்ரவரி

சப்போட்டா: ஜனவரி-பிப்ரவரி மற்றும் மே-ஜூலை

முசுக்கட்டைப்பழம் (மல்பெரி): அக்டோபர்-நவம்பர் மற்றும் மார்ச்-மே

கீரை : மார்ச் - மே, மற்றும் அக்டோபர் - ஜனவரி

மாம்பழம் : மார்ச் - ஆகஸ்ட்

தர்பூசணி: ஏப்ரல்-ஜூன்

விளச்சிப்பழம் (லிச்சீ): மே - ஜூன்

நாவற்பழம்: மே - ஜூன்

சோளம்: ஜூன் - ஆகஸ்ட்

சாத்துக்குடி: ஜூலை - ஆகஸ்ட்

சீதாப்பழம்: அக்டோபர் - ஃபெப்ருவரி

பீட்ரூட்: முழுவருடம், ஆனால் குளிர்

காலத்தில் சாப்பிட ஏதுவானது