neengal thaan en ammavaa

நீங்கள் தான் என் அம்மாவா ?

ஒரு குட்டிப்பறவை தன் அம்மாவை தேடிச்செல்கிறது. அதன் அம்மாவை எப்படி கண்டுபிடித்தது ?

- Shanjsal Kowsik

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

குஞ்சு பறவை கண் விழித்தது

அதன் அம்மாவை காணவில்லை !

குட்டிப்பறவை தன் அம்மாவை தேடி பறக்கமுயன்றது.

அச்சச்சோ !

அதனால் பறக்க முடியவில்லை. கீழே விழுந்தது.

" நீங்கள்தான் என் அம்மாவா ? " குட்டிப்பறவை  காககத்திடம்  கேட்டது .

" கா! கா!... கா! கா! நான் இல்லை !"  என்றது காகம் .

" நீங்கள்தான்  என் அம்மாவா?" குட்டிப்பறவை கோழியிடம் கேட்டது.

" கொக்கறக்கோ கூ ! கொக்கறக்கோ கூ ! நான் இல்லை !"என்றது கோழி.

" நீங்கள்தான் என் அம்மாவா ?" குட்டி பறவை வாத்திடம் கேட்டது.

"குவாக் !  குவாக் ! நான் இல்லை !" என்றது வாத்து.

ஒருவேளை  நான் சத்தமாக அம்மாவை கூப்பிட்டாள் , என் அம்மாவுக்கு கேட்கும் என்று குட்டி பறவை நினைத்தத

" கீச் ! கீச்! ... கீச் ! கீச்! "

குட்டிப்பறவையின் சத்தம் கேட்டு பறந்து வந்தது அம்மா பறவை.

தன்அம்மாவிடம்  சேர்ந்தது குட்டி பறவை.

மகிழ்ச்சியோடு வானத்தில் ஒன்றாக பறந்தன.

கீச் ! கீச்!...கீச் ! கீச்!